Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 02 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தால், டீ சிமோல் ஹோல்டர்ஸ் பக்ரீஸ் பிஎல்சி, காபன் கொன்சல்டிங் கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனங்களுடன் இணைந்து 2013ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு மரநடுகைக் கருத்திட்டமாகுமானது, ஐந்து வருடங்களுக்குள் 3,000 மரங்களை வளர்த்துப் பேணிப் பாதுகாத்துள்ளது.
இந்தக் கருத்திட்டத்தின் கீழ், 3,000 பயிர்கள், காலி மாவட்டத்தில் 15.3 ஏக்கர்களைப் பூர்த்திசெய்யும் வகையில் ஹல்விட்டிகெல, கருபனவ, நெலுவ, ஹின்கல்கொட பிரதேசங்களில் அமைந்துள்ள 31 தேயிலை சிறு உரிமையாளர் பண்ணை நிலங்களுக்கும் தேயிலை தொழிற்சாலை வளாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
இந்தத்திட்டத்தின் நோக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள தாவரப் பரப்பளவை மேம்படுத்துவதன் மூலம், சிறு உரிமையாளர்களின் வாழ்விடம், பல்லுயிரியல் தன்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுஉரிமையாளர்களுக்கு, கருத்திட்ட காலத்தில் பயிர்களைப் பாராமரிப்பதுடன் பல்லுயிரியல் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் நன்மையளிக்கப்பட்டது.
இந்தத்திட்டத்துக்கான நிதி, ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தால் பல்லுயிர் பாதுகாப்பு, வாழ்வாதார அபிவிருத்தி ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும் வழங்கப்பட்டதுடன், தேயிலை சிறுஉரிமையாளர் ஈடுபாடு, பொது மேற்பார்வை ஊடாக டீ சிமோல் ஹோல்டர்ஸ் பக்ரீஸ் நிறுவனத்தின் முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
காபன் கொன்சல்டிங் கம்பனி லிமிடெட் நிறுவனம் 2014ஆம் ஆண்டிலிருந்து மரங்களைக் கண்காணிக்கின்றது. அதனது எட்டாவது கண்காணிப்பு விஜயம், 2018 பெப்ரவரியில் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சராசரியாக நிலைத்திருக்கும் வீதம் 98சதவீதமாக அறிக்கையிடப்பட்டது. பட்ட மரங்களுக்காகப் புதிய மரங்களை நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தின் தொழிற்பாட்டுத் தலைவர், கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு, செல்வி கார்மலின் ஜயசூரிய உரையாற்றுகையில், “இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய ஒவ்வொரு சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு நிறுவனம் விரும்புகின்றது. இந்த முயற்சின் வெற்றியின் காரணமாக, பணப் பயிர்களின் நன்மையைப் பெற்றுக்கொள்வதோடு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சிங்கராஜ, கன்னெலிய மழைக் காடுகளின் உயிரியல் சூழலைப் பாதுகாப்பதற்குத் தங்கள் பங்களிப்பை வழங்கியது தொடர்பாக பெருமையடைய முடிவதுடன், இவை உங்களின் முயற்சி, ஆர்வம் காரணமாக ஏற்பட்டதாகும். அத்துடன் இந்த மரங்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன், இதன் மூலம் எதிர்காலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சுற்றாடலையும் பொருளாதார நன்மைகளையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்” என்றார்.
1 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
19 Jul 2025