Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 16 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் சுசந்த ரத்நாயக்க, தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதையடுத்து, புதிய தலைவராக கிரிஷான் பாலேந்திரா பொறுப்பேற்று செயலாற்றவுள்ளார்.
சுசந்த ரத்நாயக்க, 2018 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதுடன், ஜனவரி முதலாம் திகதி முதல் கிரஷான் பாலேந்திரா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளதுடன், பதில் தலைவர்/ குழும நிதியியல் பணிப்பாளராக கிஹான் கூரே செயலாற்றவுள்ளனர்.
நாட்டின் பட்டியலிடப்பட்ட மாபெரும் தனியார் நிறுவனமாகத் திகழும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 32.57 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பதிவு செய்திருந்தது.
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 10 சதவீத அதிகரிப்பு ஆகும். நிறுவனத்தின் விருந்தோம்பல் துறை, குறித்த காலப்பகுதியில் பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. குறிப்பாக, கொழும்பில் காணப்படும் நிறுவனத்தின் நட்சத்திர ஹோட்டல்களில் குறைந்தளவு விருந்தினர்கள் வருகை, சில ஹோட்டல்கள் புதுப்பிப்புக்காக மூடப்பட்டுள்ளமை போன்றன இவற்றில் தாக்கத்தைச் செலுத்தியிருந்தன.
இந்தத் துறை, நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 453 மில்லியன் ரூபாயை வரிக்கு முந்திய இலாபமாகப் பதிவு செய்திருந்தது. முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி, சுமார் 46 சதவீத சரிவாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago