Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையில் முதன் முறையாக மூன்று மொழிகளில், (தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்) கேட்டல், பேச்சு குறைபாடுடையவர்களுக்கு மேம்பட்ட, மாற்று தகவல் தொடர்பைக் கொண்ட டிஜிட்டல் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி, ‘அதுரு மிதுரு’ (AAC) app ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மூளையில் அல்லது பிற சிக்கல்களின் விளைவாக பெருமூளை வாதம், ஒட்டிஸம் போன்ற பல காரணங்களால் பேச்சுக் குறைபாடுகள் கண்டறியப்படலாம். விபத்துகள், செயல்கள், பக்கவாதம் அல்லது நோய்களின் விளைவாகத் தொடர்புக்கொள்ளும் திறனும் பாதிக்கப்படலாம்.
இப்போது டயலொக் வலையமைப்பில் ஊடாக ஏதேனும் அன்ரோய்ட் சாதனத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு, மேலதிக Data கட்டணங்கள் அறவிடப்பமாட்டாது. எந்தவோர் அண்ட்ரொய்ட் சாதன பாவனையாளர்களும் அண்ட்ரொய்ட் சாதனத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இந்த இரு பயன்பாடுடைய App, தகவல் தொடர்பு கஷ்டங்களுடன் உதவுவதோடு இந்த App, அவர்களின் தேவைகளையும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்த உதவுகின்றது.
இரத்மலானை ஓடியோலெஜி மய்யத்தின் பேச்சு பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளருமான ஷர்மி நாணயக்கார உரையாற்றும் போது “இந்த App பெற்றோர், பிள்ளைகள் மற்றும் பேராசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் பேச்சுக் குறைபாடுகளோடு தகவல் தொடர்பு குறித்து எதிர்கொள்ளும் பல சவால்களைத் தடுக்க ஒரு வாய்ப்பளிக்கின்றது. இது பாதிக்கப்பட்டவர்கள் எளிதாகத் தொடர்புக்கொள்வதற்கும் அவர்களது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சுற்றியுள்ளவர்கள் புரிந்துகொள்வதற்கும் ஏற்ப வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கின்றது” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .