Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
16 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் ரிதீ ரெயக் நிகழ்வு, இம்முறையும் டயலொக் அனுசரணையில் டிசெம்பர் 23ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப. 6.30 மணி முதல் இடம்பெறவுள்ளது.
பல ஆண்டுகளாக இந்நாட்டின் களிப்பூட்டும் திரையில் சிறந்த நாடக, பாடல் அம்சங்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியாக ரிதீ ரெயக் அமைந்துள்ளது. சினேஸ்டார் மய்யத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. ரிதீ ரெயக் நிகழ்ச்சியூடாக திரட்டப்படும் நிதி, மருத்துவம், ஆயுள் காப்புறுதி வழங்கப்படுவதுடன், ஓய்வு பெற்ற கலைஞர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவொன்றை வழங்கவும் சினேஸ்டார் மய்யம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிங்கள சினிமாவின் நீண்ட காலப் பாரம்பரியங்கள், கௌரவத்தன்மையை முன்கொண்டு செல்லும் வகையில், டிசெம்பர் 23ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டயலொக் ரிதீ ரெயக் 2018 நிகழ்வில், வெவ்வேறு காலப்பகுதியில் பிரபல்யமடைந்த பாடல்களுக்கு, இனிய நடனங்கள் பலதையும் சக கால கலைஞர்கள் வெளிப்படுத்தத் தம்மைத் தயார்ப்படுத்தியுள்ளனர்.
அது போன்று தேசிய கலை, கலாசாரப் பெறுமதிகளைக் கௌரவிக்கும், கலைஞர்களின் நலனில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் டயலொக் அக்ஸியாடா நிறுவனம், 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ரிதீ ரெயக் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய வண்ணமுள்ளது.
டயலொக் ரிதீ ரெயக் 2018 நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்கான அனுமதிச் சீட்டுக்கள் ரூ. 1500.00, ரூ. 2000, ரூ. 3000, ரூ. 5000, ரூ. 6000, ரூ. 7500 ஆகிய விலைகளில் அமைந்துள்ளதுடன், பொரளை சதீபா, நுகேகொட, மஹரகம, மற்றும் கிரிபத்கொட சரசவி புத்தகசாலைகளிலிருந்தும் நவலோக வைத்தியசாலையில் காணப்படும் சினேஸ்டார் பிரதான அலுவலகத்திலிருந்தும் கொள்வனவு செய்ய முடியும்.
52 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago