2025 மே 15, வியாழக்கிழமை

டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் முயற்சிகளுக்கு SLT-MOBITEL பங்களிப்பு

S.Sekar   / 2021 ஜூலை 12 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் பணிகளில் பங்களிப்பு வழங்கும் வகையில், SLT-MOBITEL, இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பனான, வெலிகேபொல பிரதேசத்தில் முதலாவது 4G கோபுரத்தை நிறுவியிருந்தது. இந்நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க, SLT-MOBITEL குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரத்ன, Mobitel (Pvt.) Ltd. இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரண, SLT-MOBITEL இன் சிரேஷ்ட நிர்வாக அங்கத்தவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இதர விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முதலாவது 4G கோபுரமாக இது அமைந்திருப்பதுடன், சப்ரகமுவ மாகாணத்தின் இணைப்புத்திறனை மேலும் மேம்படுத்துவதாக இந்த 4G LTE கோபுரம் அமைந்திருக்கும். தனியார் மற்றும் அரச துறைகளின் உட்கட்டமைப்பு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் SLT-MOBITEL கைகோர்த்து, நாட்டில் 100 சதவீதம் 4G LTE வலையமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. இதனூடாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த சமூகங்கள் எதிர்நோக்கும் இணைப்புத்திறன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு SLT-MOBITEL இன் ஆதரவு என்பது, டிஜிட்டல் புரட்சியை நோக்கிய தேசத்தின் பயணத்துக்கு உதவியாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .