Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மார்ச் 22 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெட்டோல், சுகாதார தரப்பினருக்கு தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ளது. அதன் பிரகாரம், பொதுச் சுகாதார பரிசோதனை அதிகாரிகளின் பாவனைக்காக 3000 பிரத்தியேக பராமரிப்பு அங்கிகளை (PPE) அன்பளிப்பு செய்திருந்தது.
சுகாதார அமைச்சில் இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், இதில் சுகாதார அமைச்சு மற்றும் ரெக்கிட் பென்கீசர் லங்கா லிமிடெட் ஆகியவற்றின் பிரதான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டிலுள்ள முன்னணி சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமும், 5 தசாப்த காலமாக அதிகளவு நேசிக்கப்படும் வர்த்தக நாமமுமாக திகழும் டெட்டோல், சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிகளவில் தம்மை ஈடுபடுத்தி, சமூகத்துக்கான தனது அக்கறையை தொடர்ச்சியாக உறுதி செய்த வண்ணமுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கையில் தொற்றுப் பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் டெட்டோல் முக்கிய பங்காற்றுவதுடன், தனது சகல சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களையும் அதற்கான நிதிகளையும் இந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரத் தரப்பினருக்கு உதவும் வகையில் மாற்றியமைத்திருந்தது. கடந்த ஆண்டில், சுகாதார அமைச்சு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கல்வி அமைச்சு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்மேளனம், புகையிரதத் திணைக்களம் மற்றும் பல அதிகார அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பணிகளுக்காக பங்களிப்புகளை வழங்கியிருந்தது.
வைத்தியசாலைகளுக்கும் இதர பொதுப் பகுதிகளுக்கும் டெட்டோல் நடமாடும் கைகழுவும் அலகுகளை நிறுவியிருந்தமை, விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்திருந்தமை, சுகாதார அதிகார தரப்பினருக்கு டெட்டோல் தயாரிப்புகளை அன்பளிப்பு செய்திருந்தமை, பொலிஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களான கண்டி தலதா மாளிகை மற்றும் சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் போன்ற பொதுப் பகுதிகளில் தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தமை போன்றன இந்தப் பணிகளில் அடங்கியிருந்தன. மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு கைகளைக் கழுவும் அலகுகளை டெட்டோல் நன்கொடையாக வழங்கியிருந்தமை மற்றும் 30000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு அனுகூலமளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுத்திருந்தமை போன்றன ஏனைய விசேட செயற்திட்டங்களாக அமைந்திருந்தன.
9 minute ago
19 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
35 minute ago
46 minute ago