Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 11 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருகூர்வாயில் (Bicuspid valves) குறைபாட்டை கொண்டிருந்த நோயாளி ஒருவரில் குறைந்த துளையிடலூடான Transcatheter Arterial Valve Implantation (TAVI) சிகிச்சை டேர்டன்ஸ் ஹார்ட் சென்ரரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறுகிய அல்லது சுருக்கமடைந்த இரு கூர்வாயில் (Bicuspid valves) சிலருக்கு பிறவியிலிருந்தே பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்த வால்வு மாற்றீடு செயற்பாடு, சுய விஸ்தரிப்பு Medtronic Evolut- R self-expanding trans-catheter aortic இருதய வால்வினூடாக மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் முதல் தடவையாக transcatheter aortic வால்வினூடாக இருகூர்வாயில் (Bicuspid valves) சீராக்கம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.
இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, நோயாளரான ரொபின் சதாசிவத்தின் இருதயம் தொழிற்பாடு குறைவடைந்த நிலையில் காணப்பட்டது. இருதய கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து aortic வால்வின் செயற்பாடு சீராக இடம்பெறாததுடன், இருதயத்தின் இயக்க நிலையும் மோசமடைந்திருந்தது. காலம் தாமதித்திருந்தால், திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும், இது இந்த நோயாளியின் உடல் நிலையின் பிரகாரம் பெரும் ஆபத்தாக அமைந்திருக்கும்.
வைத்தியர் பந்துல அதாவுடஆரச்சி 2019 மே மாதம் 14ஆம் திகதி மேற்கொண்ட பரிபூரண ஆய்வினைத் தொடர்ந்து, இந்தச் சிகிச்சையை அவர் டேர்டன்ஸ் வைத்தியசாலையின் நவீன வசதிகள் படைத்த catheterisation ஆய்வுகூடத்தில் முன்னெடுத்தார். நோயாளி சுயநினைவுடன் காணப்பட்டதுடன், விறைப்பு மருந்து (local anaesthesia (LA)) மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. சாதனம் இருதயத்தை நோக்கி செலுத்தப்பட்டதுடன், அசாதாரணமான நிலையில் காணப்பட்ட வால்வு, பலூன் ஒன்றினால் திறக்கப்பட்டு, உடலிலிருந்து குருதிப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக செயற்கை வால்வு அதன் மீது பொருத்தப்பட்டது.
இந்த சிகிச்சை சுமார் 90 நிமிடங்கள் வரை மேற்கொள்ளப்பட்டது. இந்த வால்வின் செயற்பாட்டின் போது எவ்விதமான சிக்கல் நிலைகளும் தோன்றவில்லை. சிகிச்சை முடிவடைந்த 24 மணி நேரத்தின் பின்னர் நோயாளியால் நடக்கக்கூடியதாக இருந்ததுடன், வைத்தியசாலையிலிருந்தும் மூன்று நாள்களின் பின்னர் வெளியேறக் கூடியதாகவும் இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago