2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

டொயோட்டா லங்கா உடன் செலான் வங்கி கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அசல் டொயோட்டா மற்றும் Hino வாகனங்களை டொயோட்டா லங்கா (பிரைவட்) லிமிடெட் ஊடாக கொள்வனவு செய்வதற்கு லீசிங் வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தப் பங்காண்மையினூடாக, விசேட வட்டி வீதங்களில், நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் திட்டங்களினூடாக வாகனத்தைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இலவச வாகனப் பதிவு, ஆறு மாதங்கள் அல்லது 10,000 கிலோமீற்றர்கள் வரை உத்தரவாதம், தமது விருப்பத்துக்குரிய காப்புறுதிப் பங்காளரிடமிருந்து குறைந்த ஆரம்பக் கட்டணத்தில் காப்புறுதி மற்றும் உதிரிப் பாகங்கள், டயர்கள் மற்றும் ஒயில் வகைகள் மீது விலைக்கழிவுகள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும் என செலான் வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் தமது வாகனத்தின் உரிமையாளராவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தனது லீசிங் சேவைகளை மீளமைத்து சௌகரியமான மற்றும் சிக்கல்கள் இல்லாத வகையில் வழங்கி வருகின்றது. செலான் லீசிங் உடன், சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள், வணிக மற்றும் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தமக்கு விருப்பமான வாகனங்களை சௌகரியமான மீளக் கொடுப்பனவுத் திட்டங்களில் கொள்வனவு செய்ய முடியும். நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பும் நிலையில், தமது சேவைகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில், மாதாந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு பொருத்தமான வகையிலமைந்த லீசிங் பக்கேஜ்களையும் வங்கி வழங்குவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .