Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை அரசாங்க வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளுக்கு மட்டுமன்றி தனியார் வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் இல்ல சங்கம் (APHNH) வேண்டுகொள் விடுத்துள்ளது.
மேலும் தனியார் சுகாதார ஊழியர்கள் அரசாங்கத்தின் தடுப்பூசி முன்னுரிமைக் கொள்கையில் இதுவரை உள்ளடக்கப்படவில்லையென சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து தனியார் வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளும் முக்கிய பங்கினை வகித்துள்ளதனால் இதுகுறித்து மறு பரிசீலனை செய்யுமாறும் சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள 50% சதவீத வெளிநோயாளர் மருத்துதுவ சேவைகளை மேற்கொள்வது தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் பிரிவுகளாகும்.
கொவிட்-19 தொற்றுநோயின் போது தனியார் துறை சுகாதார பிரிவினர் மேற்கொண்ட சேவைகள் மூலம் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்றுநோய் தீவிரமடைந்த காலக்கட்டத்தின் போது நோயாளர்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி தமது சேவைகளை சிறப்பாக மேற்கொண்டு அரசாங்கத்திற்கு தமது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“தனியார் சுகாதார அதிகாரிகள் களத்தில் முன்னணியிலுள்ள கதாநாயகர்கள், அவர்கள் அபாயகரமான வைரஸை வெற்றிகரமாக எதிர்கொள்கின்றனர். அரசாங்க ஊழியர்களைப் போலவே அவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். தொற்றுநோயைத் தடுப்பதற்காக அவர்களும் முன்னின்று செயற்பட்டு வருகிறார்கள். அதனால் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் போது அவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். எமது சங்கம் மற்றும் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு (PHSRC) ஆகியன தனியார் சுகாதார ஊழியர்களும் தடுப்பூசி வழங்குவதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை தன்வசம் கொண்டுள்ளனர்.
“கடந்த மாதங்களாக, எங்களது உறுப்பு மருத்துவமனைகள் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்கள் நாட்டின் கொவிட்-19 தடுப்பு மற்றும் பராமரிப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். நாங்கள் PCR பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளோம், மேலும் அரசாங்கத்திடமிருந்து கொவிட்-19 கவனிப்பு சுமையை எளிதாக்க இடைநிலை பராமரிப்பு வசதிகளை மேற்கொண்டோம். இதனால் தான் அரசாங்க சுகாதார பிரிவினருடன் இணைத்து தனியார் பிரிவு சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” என தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாதியர் பராமரிப்பு சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கோரிக்கையை முன்வைக்கும் போது, நாடு முழுவதிலும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு உதவ தனியார் சுகாதாரத் துறை தயாராக உள்ளதாக APHNH தெரிவித்துள்ளது. பெப்ரவரி 01, 2021இல் இருந்து இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் 100,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago