Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் முன்னணி துரித வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பெருநிறுவனமான சியோகா நிறுவனமானது, ஐரோப்பாவில் சுவைகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் வகைகள் போன்றவற்றை உருவாக்கி வரும் நிறுவனங்களில் ஒன்றான Frey + Lau நிறுவனத்தின் ஏக முகவராக இணைந்து கொண்டுள்ளது.
ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரைத் தளமாகக் கொண்ட Frey + Lau (F+L) நிறுவனம் இத்துறையில் 175 ஆண்டுகளுக்கும் மேலான தலைமைத்துவத்தை கொண்டுள்ளதுடன், அதன் உற்பத்தி தொகுப்பில் 2000 க்கும் மேற்பட்ட சுவை ரகங்களை கொண்டுள்ளது. F+L நிறுவனம் உணவுகள், இனிப்பு மற்றும் குடிபான துறைக்கான சுவைகளையும், ஒப்பனை, டிடர்ஜன்ட் மற்றும் தூய்மைப்படுத்தல் துறைக்கான வாசனைத் திரவியங்களையும், மருந்தக மற்றும் நல்வாழ்வு துறைக்கான அத்தியாவசிய எண்ணெய் வகைகளையும் உற்பத்தி செய்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், படைப்பாற்றல் திறமைகள் மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றை கொண்டுள்ள F+L ஆனது புதுமையான, கடுமையான தர கட்டுப்பாடுகள் மற்றும் போட்டிமிக்க விலை உற்பத்திகளுக்கான வாடிக்கையாளர்களின் கேள்விகளை பூர்த்தி செய்யும் வகையில் சுவைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வழங்கி பூரணமான தீர்வுகளை விருத்தி செய்து வருகிறது.
உள்நாட்டு சந்தையில் சுவைகள் தொடர்பாக வளர்ந்துவரும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் சியோகாவின் சுவைகள் பிரிவுகள் செயற்பட்டு வருகிறது. F+L இற்கான ஏக முகவர் எனும் ரீதியில் சியோகா நிறுவனம் மதிப்பை சேர்க்கவுள்ளதுடன், உள்நாட்டு உணவு மற்றும் குடிபான உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சுவைகளை வரையறுக்க உதவிடும் வகையில் சாதகமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது.
'Frey + Lau ஊடாக சியோகா சுவைகள் பிரிவானது சிறந்த மற்றும் தனிச்சிறப்புமிக்க சுவைத் தீர்வுகளை இலங்கையின் பன்முக தொழிற்துறைக்கு வழங்கவுள்ளது என சியோகா (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சுவைகள் பிரிவின் பொது முகாமையாளர் ஸ்டுவர்ட் ஹட்ச் தெரிவித்தார். 'நாம் சேவையாற்றும் முன்னேற்றகரமான தொழிற்துறையை கருத்தில் கொண்டு, எமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புதிய உற்பத்திகள் மற்றும் சுவைகளையே நாடுகின்றனர். F+L ஆனது அதன் திரவ மற்றும் பொதியுறைப்படுத்திய சுவைகள் ஊடாக சுவை தொகுப்புகளுக்கு பொருத்தமான துல்லியமான உற்பத்திகளை வழங்க முடியும்' என மேலும் தெரிவித்தார்.
மேலும் சியோகா நிறுவனமானது கிளாசிக் சுவை உருவாக்கம் தொடர்பான F+L இன் தலைசிறந்த நிபுணத்துவம் மற்றும் அறிவு போன்றவற்றை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதனூடாக இலங்கையின் தேயிலை தொழிற்துறைக்கு சேவையாற்றி வருகிறது.
F+L இன் புதிதாக உருவாக்கப்பட்ட CAPSOPEARL® சுவை தூளானது தேநீர் வல்லுநர்களுக்கு மிகச்சிறந்த தேநீர் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. வெறுங்கண்களால் பார்க்க முடியாத Capsopearl உயர்ரக தேயிலை தூளானது தேநீரில் வியாபிக்கும் போது மட்டுமே காணக்கூடியதாக இருக்கும்.
தலைசிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ள CAPSOPEARL® ஆனது 36 மாதங்களுக்கு அடுக்குகளில் வைக்கப்பட்டிருப்பதுடன், சேமிப்பின் போது மிகக்குறைவான ஒக்சிஜனேற்றம் வழங்கப்படுகிறது. மேலும் விசேடமாக உருவாக்கப்பட்ட கூட்டானது தேநீரில் வியாபிக்கும் போது கட்டுப்பாடுடன் சுவையை வெளியிடும் வகையில் அமைந்துள்ளது. இத் தூள்களின் சிறப்பான கரையும் தன்மையானது தேநீர் விரும்பிகளுக்கு ஈர்க்கக்கூடிய நறுமணத்தை கொண்ட தேநீர் குவளையை வழங்குகிறது.
'F+L இன் CAPSOPEARL® ஆனது தனிப்பட்ட மற்றம் தனித்துவமான தேநீர் சுவைகள் கொண்ட புதிய தொகுப்பாக உலகத் தேயிலையை உருவாக்க உதவியுள்ளது. இன்று தேயிலை என்பது நம் கலாச்சாரத்தினுள் வேரூன்றியுள்ளதுடன், சியோகாவானது உள்நாட்டு ஏற்றுமதியாளருக்கு தனித்துவமிக்க உற்பத்திகளை நிலைப்படுத்துவதற்கான உதவிகளை வழங்கியுள்ளது' என ஹட்ச் குறிப்பிட்டார்.
F+L இன் உற்பத்திகள் மற்றும் வாடிக்கையாளரின் குறிப்பிட்ட வேண்டுகோள்களை குறுகிய விநியோக நேரத்தில் பூர்த்தி செய்தல் போன்றவை தொடர்பான அதன் நெகிழ்ச்சிமிக்க வாடிக்கையாளர் தீர்வுகள் தொடர்பில் சியோகா வலியுறுத்துகிறது.
32 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
4 hours ago