2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்திலும் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கும்

Gavitha   / 2020 நவம்பர் 01 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமலிலுள்ள காலப்பகுதியில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்கும் எனவும், அதற்கான உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தாம் கவனம் செலுத்துவதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பின் பெரும்பாலான பகுதிகள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்துக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏற்றுமதி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ஏற்றுமதி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள், 2020 ஏப்ரல் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X