2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தன்னியக்க உணவு குளிரூட்டல் களஞ்சிய வெப்பநிலை கண்காணிப்பு தீர்வு

S.Sekar   / 2021 மே 13 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே லங்கா தனது குளிரூட்டல் களஞ்சிய வெப்பநிலையை முகாமைத்துவம் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு புத்தாக்கமான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டயலொக் என்டர்பிரைசால் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவுத் தொழிற்துறையில் இந்த வகையில் முதன்முதலாக அறிமுகமாகின்ற ஒரு தீர்வாக இது மாறியுள்ளது. நெஸ்லேயின் மூலப்பொருட்களின் குளிரூட்டல் களஞ்சியப்படுத்தலுக்கான உகந்த நிலைமைகளின் பேணல் பராமரிப்பை இது தன்னியக்கமயமாக்குவதுடன், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் அலாரங்களைத் தூண்டுவதன் மூலமும் மற்றும் எஸ்எம்எஸ் குறுஞ்செய்தித் தகவல் விழிப்பூட்டல்களைத் தோற்றுவிக்கின்றது. முந்தைய மனிதரீதியான கண்காணிப்பு முறைமையைப் போலன்றி, புதிய தீர்வானது மேம்பட்ட தொழில்நுட்பம், இணைப்பு தளங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் அனுகூலத்தின் மூலம் நெஸ்லே லங்காவின் தலைசிறந்த கடுமையான தர முகாமைத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த உதவும்.

'தரம் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாங்கள் அதிமுக்கியத்துவம் அளித்துள்ளதுடன், எங்கள் தயாரிப்புகள், கட்டமைப்புகள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும் இது பொருந்தும். ஒரு தயாரிப்பில் நெஸ்லேயின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை தரத்திற்கான உத்தரவாதத்தின் அடையாளம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த முக்கிய பலத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்தும் கடுமையாக உழைக்கிறோம். தொழிற்துறையில் முதன்முதலாக அறிமுகமாகின்ற இந்தத் தீர்வை அறிமுகப்படுத்துவதில் டயலொக் என்டர்பிரைசுடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,' என்று நெஸ்லே லங்கா பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் கவாலின் குறிப்பிட்டார்.

'நெஸ்லே நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள குளிரூட்டல் களஞ்சியப்படுத்தல் வெப்பநிலை கண்காணிப்புத் தீர்வு பகிரங்க புத்தாக்கங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். இந்த வணிக பெறுமதியைத் தோற்றுவிப்பதில் நெஸ்லே மற்றும் டயலொக் என்டர்பிரைஸ் சொலூஷன் அணிகள் ஒன்றாக இணைந்து செயற்பட்டுள்ளன. நெஸ்லே போன்ற உலகளாவிய வர்த்தகநாமம்  மற்றும் நிறுவனத்தை அதன் அதியுயர் உணவுப் பாதுகாப்பு தரத்தைப் பேணிப் பராமரிப்பதற்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,' என்று டயலொக் அக்ஸியாட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரியான சுப்புன் வீரசிங்க குறிப்பிட்டார்.

டயலொக் என்டர்பிரைசின் குளிர்விப்பு அறை வெப்பநிலை கண்காணிப்பு கட்டமைப்பு, அதிநவீன Internet of Things (IoT) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், செயல்பாட்டு திறன் மற்றும் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்குப் புறம்பாக, தரவு பகுப்பாய்வுகளுக்கான கிளவுட் (cloud) தரவு சேகரிப்பு மற்றும் தேக்ககத்தை (storage) இத்தீர்வு வழங்குகிறது. மேலும், இது தொழில்துறை 4.0 பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு குளிர்விப்பு சங்கிலி தளவாடங்களை மேலும் மேம்படுத்துவதற்கும் ஒன்றோடொன்றுடனான இணைப்பு, தன்னியக்கமயமாக்கம், இயந்திர கற்றல் (machine learning) மற்றும் நிகழ்நேர பகுப்பாய்வுகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கான ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X