Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014 மற்றும் 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் வைபவத்தில், தராங்கனீ காமென்ட்ஸ் (பிரைவெட்) லிமிட்டட், 'சிறந்த வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர் விருது 2014' ஐ தனதாக்கியிருந்தது. இது விசேட விருதுகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்தது. தராங்கனீ காமென்ட்ஸ் லிமிடடட் பிரதம நிறைவேற்று அதிகாரி ருக்மல் பெர்னான்டோ கருத்துத்தெரிவிக்கையில், 'இப் பயணத்தில் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
முதல் தடவையாக நாம் வளர்ந்து வரும் ஏற்றுமதியாளருக்கான விருதைப் பெற்றுள்ளோம். தொடர்ந்து கஷ்டப்பட்டு உழைத்து வரும் அனைவரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரமாக இது அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் எம்மால் இதுபோன்ற பல விருதுகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்' என்றார்.
பல வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ள வர்த்தகரான பெர்ணான்டோ, நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்பட்ட மாபெரும் பெறுபேறுகளுக்கு முக்கியக் காரணியாக அமைந்திருந்தார். நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர், பல புதிய கொள்கைகளையும் வினைத்திறன் வாய்ந்த செயற்பாடுகளையும் அறிமுகம் செய்திருந்தார்.
1984ஆம் ஆண்டு தராங்கனீ காமென்ட்ஸ் பிரைவெட் லிமிட்டட் நிறுவப்பட்டது. இது இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியைப் பெற்ற நிறுவனமாகும். இலங்கையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஆடை உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்வதுடன், காமென்ட் உற்பத்தியில் பரந்தளவு அனுபவத்தையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இலங்கையில் பரந்தளவு உற்பத்தி தொடரை பேணி வருவதுடன், குறுகிய காலப்பகுதியில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த வகையிலான பதிவுகளையும் பெற்றுக் கொண்டு தரமான வினைத்திறன் வாய்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
1981ஆம் ஆண்டு ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் ஏற்றுமதித்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் சிறப்பான செயற்பாடுகளைக் கௌரவிக்கும் மிகவும் உயர்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாக நடைபெறுகிறது. குறிப்பாக இலங்கையின் ஏற்றுமதித்துறையில் சிறந்தப் பங்களிப்புகளை வழங்கிய நிறுவனங்களின் செயற்பாடுகள் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் மூலமாக கௌரவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டின் வைபவம் என்பது 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஏற்றுமதியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்து சிறப்பு விருதுகளும் பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவில் 93 விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. மொத்தமாக 113 விருதுகள் இதன் போது வழங்கப்பட்டிருந்தன.
22 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
4 hours ago