Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பல மாதங்களில் சுகாதார துறையில் மாற்றங்கள் பல ஏற்பட்டதுடன் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதன் அச்சுறுத்தல் காரணமாக அது இலங்கையில் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து சுகாதார சேவை பிரிவினரும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார சேவை ஊடாக வழங்கப்பட்ட முன்மாதிரியான செயற்பாடே உண்மையில் இந்த நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நன்மையாகும். உலகம் முழுவதுமுள்ள ஏனைய அனைத்து குழுவினர் போன்று எமது மருத்துவ குழுவினர் மற்றும் முன்னணி சுகாதார ஊழியர்கள் இந்த தொற்று நோய் காலத்தின் போது, மிக தைரியத்துடன் செயற்பட்டனர்.
நிகழ்காலத்தில், அதிக வளங்ளை கைவசம் கொண்டிருந்தாலும் இந்தத் தொற்றின்போது அதிக பாதிக்கப்பிற்குள்ளான நாடுகள் செயற்பட்ட விதத்தை பார்க்கும்போது விரைவாகவும் தீர்மானமிக்க தருணத்திலும் அனைத்து தரப்பினரையும் தொடர்புபடுத்திக்கொண்டு இத்தகயை ஒரு நிலையை தடுப்பதற்கு சிறப்பாக செயற்பட்ட சுகாதார துறைக்கு உதாரணமாக இலங்கை வெளிப்படுத்திய ஆற்றல்களை கூறலாம்.
இந்தப் பிரயத்தனத்தில் தனியார் சுகாதார சேவையினரும் தீர்மானமிக்க பொறுப்புக்களை ஆற்றியதை இந்த சந்தர்ப்பத்தில் நான் பெருமையுடன் தெரிவிக்கின்றேன். தேசிய சுகாதார சேவை கட்டமைப்பும் ஏனைய வளங்களும் இந்தத் தொற்று பரவுவதை தடுப்பற்கு பணியாற்றிய வேளையில், தனியார் சுகாதார சேவையினர் எமது மக்களின் ஏனைய அத்தியாவசிய சுகாதார சேவைகளை நிறைவேற்றினர். கொரோனா வைரஸ் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அந்த அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் எமது சுகாதார சேவை, அதனை எதிர்கொண்ட ஆற்றல் காரணமாக நாம் பாரிய எழுச்சியுடன் முன்நோக்கி பயணித்தோம்.
எவ்வாறாயினும், நாம் தொடர்ந்தும் லொக்டவுன் நிலையில் இல்லாததுடன் 'புதிய சாதாரண' நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும் அனர்த்த நிலைமை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. தொற்றின் இரண்டாம் அலை ஏற்படும் நிலை உள்ளதுடன் . கொரோனா வைரஸ் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியற்றை வலுப்படுத்தி எமது தனியார் சுகாதார சேவை முன்நோக்கி வந்துள்ளது. இரண்டாம் அலை ஏற்படக்கூடிய சவாலின் மத்தியிலும் அனைத்து இலங்கையர்களுக்கும் சிறந்த சுகாகார சேவையை தொடர்ச்சியாக வழங்க இந்நாட்டு தனியார் சுகாதார சேவை கட்டமைப்பு பலமாக உள்ளது.
பிரதான காரணங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தல்: கொரோனா வைரஸ் நிலைமைக்கு எதிராக எமது செயற்பாட்டை நன்றாக அமைத்துக்கொள்வது எவ்வாறு?
இந்த தொற்று காலகட்டத்தின்போது அநேக தொற்றா நோய்களை (NCDs) தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக விஞ்ஞான சஞ்சிகையான 'த லான்செட்' (The Lancet)இல் வெளியான ஆக்கம் ஊடாகவும் இது அறிவுறுத்தப்பட்டுள்ளது. . கொரோனா வைரஸ் தொற்றுடன் நோயாளர்களுக்கான பிரதான ஆபத்து காரணியாக தொற்றா நோய்கள் அறியப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு சுகாதார காரணிகளால் . கொரோனா வைரஸ் கொண்ட நோயாளர்களுக்கு இதன் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக 2020 த லான்செட் ஆய்வுகளில் வெளியாகியுள்ள முக்கிய விடயமாகும்.
இலங்கையை எடுத்துப் பார்த்தால் இந்நாட்டில் இடம்பெறும் மரணங்களில் 83% தொற்றா நோய்கள் காரணமாக இடம்பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (உலக சுகாதார ஸ்தாபனம் 2016). அத்துடன் இலங்கைக்குள் ஏற்படும் முதிர்ச்சியடையாத பருவ மரணங்களுக்கான 10 காரணங்கள் வரிசையில் தொற்றா நோய்கள் இருப்பதுடன் அதில் இதயம் சார்ந்த நோய்கள் முன்னணி வகிக்கின்றன.
பூகோள ரீதியாக லொக்டவுன் செய்தல், சமூக இடைவெளி மற்றும் சுற்றுலா வரையறைகள் போன்ற நடவடிக்கைகள் ஊடாக NCD உடன் வாழும் நபர்களுக்கே அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த செயற்பாடு காரணமாக அவர்கள் சிகிச்சை பெறுதல் அல்லது சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள வருவது போன்றன வரையறைக்குட்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படல் மற்றும் லொக்டவுன் செய்தல், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல், புகையிலை பாவனை, குடிப்பழக்கம் உள்ளிட்டவை தொற்றா நோய்களால் ஏற்படும் பலீனமான செயற்பாடுகளால் இது அதிகரிக்க காரணமாகும். (பிபிசி செய்திகள் 2020). அதற்கமைய இலங்கையில் தற்போது தொற்று நிலைமையுடன் அபாயத்துக்குள்ள நபர்களை தெளிவாக இனங்காணலாம்.
இலங்கை அரசாங்கம், தனியார் சுகாதார சேவையுடன் இணைந்து முன்னணி பணியாக NCD தடுக்க மற்றும் குணமாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உறுதிமொழி வழங்கியுள்ளது. எமது மக்களுக்குள் சிறந்த சுகாதார பழக்கங்களை மேம்படுத்தி அனைவருக்கும் சுகாதார சேவைகளுக்கான பிரவேச சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கும் தொற்றா நோய்களால் ஏற்படும் சவால்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் சுகாதார துறையின் செய்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்காத்துடன் தனியார் சுகாதார சேவை வழங்குனர்கள் நீண்டகால செயற்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம் என்பதுடன், தனியார்-அரசு இணைந்த பங்களிப்புடன் சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பதும் NCDகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனியார் துறையின் பங்களிப்பு ஆகியன எதிர்காலத்தில் இடம்பெறலாம்.
கொரோனா வைரஸ் இன் போது தொற்றா நோய்கள் பிரதான இடங்களை பெறுவது எவ்வாறு?
நிகழ்காலத்தில் சுகாதார சேவைகள் ஒன்றுடன் ஒரு பிரிவு இணைந்து பலமாக தொடர்ச்சியாக NCD தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை கூறலாம். NCD உடன் வாழும் நபர்களின் தேவைகளை சந்;திப்பதற்கு அதற்காகவே செயற்படுத்தப்பட்ட திட்டமொன்று அவசியம். மேலும் சுகாதார சேவை வழங்குனர்கள் அறிந்துள்ள அநேக தொற்றா நோய்கள் கொண்ட நபர்களின் அபாய நிலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதுடன் இனங்காணப்படாத தொற்றா நோய்களுள்ள நபர்களின் அபாய நிலை தொடர்பாக உணர்ந்து செயற்பட வேண்டும்.
வழமையான நோயாளர்களுக்கு . கொரோனா வைரஸ் அதிக அபாயமாக உள்ளதால், தற்போது மிக கடுமையாக உழைக்கும் சுகாதார சேவைகளுக்கு இது மேலதிக சுமையாக இருக்கும் அபாயமும் உள்ளது. ஒரே தடவையில் பல நிலைமைகள் கொண்ட NCD நோயாளர்கள் மட்டுமல்ல NCD சிகிச்சையகங்களில் பணிபுரியும் சுகாதார சேவை ஊழியர்களுக்கும் கொவிட் தொற்றும் அபாயம் நிலவுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்காக NCD தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் சில:
கொரோனா வைரஸ் உபாய மார்க்க சிகிச்சைகளை திட்டமிடும்போது NCD ஊழியர் குழாமையும் தொடர்புபடுத்திக் கொள்ளல்.
கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதனைகள் செய்யும்போது NCD நோயாளர்கள் மற்றும் ஊழியர் குழாமிற்கு முன்னுரிமை அளித்தல்.
NCD உடன் வாழும் நோயாளர்களை தொடர்ச்சியாக பாதுகாப்பதற்காக டெலிமெடிசின் சேவையை அதிகம் பயன்படுத்துதல்.
NCD நோயாளர்களின் தேவைகளை சந்திப்பதற்காக பாதுகாப்புக்கு சமூக மட்ட சேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை வழங்;குவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
சுகாதார சேவையானது இப்போதே மிக பிரயத்தனத்துடன் செயற்படும் NCD களுக்கு எதிரான போரை அவர்களால் தனித்து செய்ய முடியாது. NCD நிகழ்ச்சி நிரலில் அதிக கேள்வி சுகாதார துறை தொடர்பான நிதி செயற்பாடுகளிலும் சேவை வழங்குவதிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, வெளி நோயாளர் சிகிச்சைகளில் 50% தனியார் பிரிவு மீது சார்ந்துள்ளதுடன் தனியார் சுகாதார சேவை வழங்குனர்கள் இந்நாட்டின் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தீர்மானமிக்க காரணியாக உள்ளனர்.
(இந்த ஆக்கத்தின் எழுத்தாளர் தனியார் வைத்தியசாலை மற்றும் பராமரிப்பு நிலைய சங்கத்தின் தலைவராவார். 1972 இல் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சங்கமானது சுகாதார ஊழியர்களிடையேயுள்ள திறன்களை மேம்படுத்துவதற்காக வசதிகளை ஏற்படுத்தும் என்பதுடன் இலங்கையின் தனியார் சுகாதார துறையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றும்)
தனியார் வைத்தியசாலை மற்றும் பராமரிப்பு நிலைய சங்க தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ்
2 minute ago
8 hours ago
30 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 hours ago
30 Jul 2025