Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீ-கனெக்ட் சர்வதேச கூட்டமைப்பு முதலீட்டுக்கு தயார் சூழல் மற்றும் வணிகம் தொடர்வதற்கான பயிற்சி மற்றும் பொருள் விநியோகம் மற்றும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வட்ட மேசை - தொழில் நிறுவனங்களை இணைக்கும் 100-க்கும் மேலான இலங்கை பெண் தொழிலதிபர்களை இணைக்கும் நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த சிறப்பு நிகழ்வானது மகளிரை பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக மேம்படுத்தும் திட்டமாகும். இத்திட்டமானது அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பிரிவு வழங்கிய நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங், இந்நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்தினார். இதில் பெண் தொழிலதிபர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
``இலங்கையில் வீ கனெக்ட் சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் திட்டப் பணிகளுக்கு அமெரிக்க அரசு மிகவும் தாரளமாக மனம் உவந்து நிதி அளிக்கிறது,’’ என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் சுங் குறிப்பிட்டார். ``ஆண்கள் தொழில் தொடங்கி செயல்படுவதைப் போன்றே பெண்களும் தொழிலதிபர்களாக மாறவேண்டும் என்று இந்த கூட்டமைப்பின் இலக்கு நிர்ணயித்து அதற்குரிய சூழல் மற்றும் ஸ்திரமான வளர்ச்சி வாய்ப்புகளை பெண் சமூகம் மத்தியில் இந்நாட்டில் உருவாக்கி செயல்படுத்துவது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது,’’ என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் மகளிர் நடத்தும் தொழில்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த நிகழ்வு அவசர கதியில் நடத்தப்படுகிறது. மகளிரின் திறன் மேம்பாடு பயிற்சியில், பொருள் விலை நிர்ணய உத்தி மூலம் தொடர்ந்து தொழிலில் நிலைத்து நிற்பது மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கச் செய்வது, டிஜிட்டல் சந்தை வாய்ப்பு மூலம் உள்ளூர் மற்றும் பிராந்திய வர்த்தகத்துக்கு வழி ஏற்படுத்தவது ஆகியவற்றுடன் வீ கனெக்ட் சர்வதேச கூட்டமைப்பின் தொடர்பு மூலம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள மகளிர் தொழிலதிபர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.
இந்நிகழ்வில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பெண் தொழிலதிபர்கள் குறிப்பாக சேவைத்துறை, உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பம், வேளாண் துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களது தொழிலுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். கலந்துரையாடல் மூலம் தங்களது தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகளை அறிவதோடு, தயாரிப்புகளை வாங்கும் நிறுவனங்களை கண்டறியவும் இந்நிகழ்வு ஒருவாய்ப்பாக அமைந்தது. பெண் தொழிலதிபர்களும் இணைந்து கூட்டாக ஒருங்கிணைப்பை உருவாக்கி அதன் மூலம் புதிய தொழில்வாய்ப்புகளைக் கண்டறியவும் இது வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.
பொருள் விநியோகம் மற்றும் அனைவருக்குமான ஒருங்கிணைப்பு வட்டமேசை நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட நிறுவன பிரதிநிதிகள் பாலின பேதமின்றி பெண் தொழிலதிபர்களிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்நிகழ்வில் பெண் தொழில் அதிபர்கள் குறிப்பாக ஐட்கென் ஸ்பென்சஸ், ஹார்லேஸ், சிலோன் பிஸ்கெட்ஸ் லிமிடெட், கமர்ஷியல் வங்கி, ஹெச்என்பி மற்றும் மலிபான் உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
27 minute ago
32 minute ago
36 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
36 minute ago
50 minute ago