Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத்துறையானது, அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக, தோட்டத் தொழிலாளர்கள், பெரும்பாலான தோட்ட சமூகத்தை பாதுகாப்பதற்காக துரிதமான புதிய நடவடிக்கைகள் மத்தியில் பிரதேச பெருந்தோட்ட கம்பனிகளின் (RPC) நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் (PA) தெரிவித்துள்ளது.
தீர்மானம் மிக்க நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக பெருந்தோட்டத் துறைக்கு வெற்றிகரமான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்காக துறையில் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுனில் போஹோலியத்த தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 கொள்ளைநோய் பாரதூரமான நிலைக்கு திரும்பியவுடனே மார்ச் 13ஆம் திகதி ஆகும் போது தோட்டங்களின் நடவடிக்கைகளை நிறுத்தியதுடன் 4 நாட்கள் இடையூறின் பின்னர் பிரதேச பெருந்தோட்ட நிறுவனம் பல நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தது. இதற்கு காரணம், பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களினால் அனைத்து தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விசேடமாக பாரிய அளவில் பரந்து காணப்படும் தோட்ட சமூகத்திற்கு அவர்களது தேவைகளை உறுதிப்படுத்தும் முகமாக துரிதமான சுகாதார, பாதுகாப்பு வழிமுறைகளை அமைப்பதற்காக சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை ஆகும்.

“கொவிட்-19ஆல் உள்ள சவால்கள் தேயிலை உற்பத்தியாளர்களை பாரிய சிரமத்திற்குள்ளாக்கியுள்ளதுடன் கடந்த 3 மாத காலமாக என்றுமில்லாதவகையில் பாரிய வரட்சியையும் எதிர்நோக்கியுள்ளதோடு அவர்களது தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அறுவடை இல்லாமல் போயுள்ளதன் காரணமாக தற்போது உற்பத்திச் செலவானது (COP) அதிகரித்துள்ளது.
“எதிர்காலத்தில், சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட சமூகத்தினருக்கு கொவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முடிந்த எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதிப்படுத்துவதற்காக அனைத்து பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் முழுமையான மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து மீண்டும் சுட்டிக்காட்டத்தக்கது.

“தொழிலாளர்களுக்கு உணவுப் பொதிகளை பெற்றுக் கொடுத்தல், உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய விடயங்கள் குறித்து முற்பணக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி அந்த ஒவ்வொரு பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் வெற்றிகரமான செயற்பாடுகள் குறித்து போஹோலியத்த பாராட்டு தெரிவித்துள்ளார். தோட்ட சமூகத்திற்கு நீண்ட வரிசையில் நிற்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வதற்காக இவ்வாறான கூட்டணி ஊடாக தேவையான உணவுகள் நேரடியாக தோட்டங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
“தற்போது பிரதேச தோட்ட நிறுவனங்களின் தேயிலைப் பிரிவு சுமார் 135,000 தொழிலாளர் சக்தியை மேற்கொண்டு வருவதுடன் புலம்பெயர்ந்துள்ள தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் தோட்டங்களுக்கு வந்துள்ளதனால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் அடங்கிய பெரும்பாலான தோட்ட சமூகத்தினரின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொறுப்பு கூறவேண்டியுள்ளது.

“தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த சவாலான விடயமானது கொழும்பு தேயிலை ஏல விற்பனை நடவடிக்கையாகும். இரண்டு வாரங்களின் பின்னர், ஏலத்திற்காக இலத்திரனியல் தளமொன்றை அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
“அதன்மூலம், இருபது வருடங்களுக்கு மேல் பழைமையான முறiயொன்று ஒன்றிணைந்து மாற்றம் செய்ததற்காக நாம் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இவ்வாறு தோட்ட விநியோக சங்கிலியின் அனைத்து பிரிவும், அதாவது, தயாரிப்பிலிருந்து கொண்டு செல்லல் வரை, விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியன அரசின் மேற்பார்வையின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது விசேடமான வெற்றியாகும். எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு அதன்படி அரசின் உத்தரவை பின்பற்றுவதற்கு நாம் அரசுடன் இணைந்து ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்வதுடன் இந்த தீர்மானம் மிக்க சந்தர்ப்பத்தில் தேவையான ஏற்றுமதி வருவாயின் மூலம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முழு முயற்சி எடுத்துள்ளோம்” என போஹோலியத்த தெரிவித்தார்.

தொற்றுநோயின் விளைவாக என்றுமில்லாத வகையில் உலகளாவிய விநியோக சங்கிலி இடையூறு ஏற்பட்டமையின் காரணமாக, 2020 ஏப்ரல் 3ஆம் திகதி ஏற்பட்ட முதலாவது தேயிலை ஈ-ஏல விற்பனை முடிவடையும் போது இலங்கையின் தேயிலைக்கு எதிர்பார்க்கப்பட்ட அதிக விலை நிர்ணயத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. வாரம் தோறும் ஏல விற்பனை அளவு, பொதுவான அறுவடையானது மாதம் ஒன்றைவிட நூற்றுக்கு 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததுடன் இந்த அதிக விலைகள் அடிப்படையாக அமைந்தது, குறைந்த தயாரிப்பு மற்றும் ரூபாயின் வீழ்ச்சி ஆகிய விளைவுகளே ஆகும்.
என்றபோதிலும், இந்த விலை அதிகரிப்பு நெருக்கடி நிலைமை பிரயோசனமாக இருக்கின்ற போதிலும் குறித்த உள்ளீடுகள் அதிகரித்தமையினால் அதன் அழுத்தத்தை கருத்திற் கொள்ளும் போது பணத்தின் பெறுமதி வீழ்ச்சி, தொழிலுக்கு பெரும் சவாலாக இருந்ததுடன் குறைந்த உற்பத்தி நடவடிக்கைகளும் கூட இதனுடன் சேர்ந்து தற்போது அதிகமான உற்பத்திச் செலவுகளுக்கு எதிர்மறையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக போஹோலியத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இறப்பர் பிரிவை எடுத்துக் கொண்டால் இறப்பர் செய்கையை மேற்கொள்ளும் பகுதிகளில் சீரான காலநிலை நிலவுவதன் காரணமாக உற்பத்திகள் அதிகரித்துள்ளதோடு, கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 6 ஏல விற்பனைகள் 3 வாரங்களாக காலதாமதம் ஏற்பட்டது. ஏல விற்பனைகளுக்கு இடையூறு ஏற்பட்டமையினால் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் பணப் புழக்கத்திற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டதாக போஹோலியத்த தெரிவித்துள்ளார்.
“ஏல விற்பனையை மீண்டும் ஆரம்பிப்பதானது றபர் பிரிவின் மேம்பாட்டிற்கு மிக முக்கியமாக வரவேற்பை பெறுகிறது. அதிக விலை கொவிட் வேலைத்திட்;டத்திற்கு முன்னர் விலை அதிகரிப்பு ஒப்பீட்டு அளவில் ஓரளவு மட்டத்தில் இருந்ததுடன் உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தமையை கருத்திற் கொண்டு நாம் இங்கு மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், கைக் கவசம், தீவிர சுகாதார முறை மற்றும் சமூக தனிமைப்படுத்தலை உறுதிப்படுத்துவதற்காக அதன் உறுப்புரிமை சட்டதிட்டங்களை மேற்கொண்டு செல்வதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அனைத்து பணியாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகள் மட்டுமன்றி தொழிற்சாலைகளிலும் கிருமிகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த என்றுமில்லாத உலகளாவிய தொற்றுநோயால் அனைத்து தோட்ட சமூகத்தினரையும் பாதுகாக்கவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளனர். குறைந்த அறுவடை காரணமாக மலை நாட்டு தேயிலை தோட்டங்கள் என்றுமில்லாத அளவில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையிலேயே அவர்கள் இதனை மேற்கொள்கின்றனர்.
“சவால்களுக்கு மத்தியிலும், தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள், வளர்ச்சியடையும் நிலைமையை நன்றாக அவதானித்து வருவதுடன் அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளினால் மிகவும் துரிதமாக மற்றும் உடனடியாக கொடுக்கும் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராகவும் உள்ளனர்” என தோட்டத் தொழிலாளர்களின் சங்க ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago