2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீடு, 2016இல் வீழ்ச்சி

Gavitha   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு, கடந்த ஆண்டின் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 45.6 சதவீதம் வீழ்ச்சியடைந்து சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தத் தொகை 658 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

2015ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக, கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள் இந்த வீழ்ச்சியில் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் 5 பில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் எய்தப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த இலக்கை எய்துவதற்குப் போதியளவு வழிகாட்டல்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என, முதலீட்டு செயற்பாடுகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் அரச கொள்கைகளில் தளம்பல்களை அவதானிக்க முடிந்ததுடன், வரி விதிப்புகளிலும் ஸ்திரமற்ற நிலையைக் காணக்ககூடியதாக இருந்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X