Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 11 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வின் போது, இலங்கையின் மிகவும் பெரியளவான பெயின்ஸ் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிபொன் பெயின்ஸ், தங்க விருதைத் தனதாக்கிக்கொண்டது.
குறித்த துறையில் இருக்கும் வர்த்தக நிறுவனங்களின் சிறப்புத்தன்மைகளை அங்கிகரிக்கும் முகமாக, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் இந்த விருது வழங்கும் நிகழ்வு, வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், கூட்டுமுயற்சியின் மூலம் இலங்கையைக் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கும், முதலீடு உள்ளிட்ட உற்பத்தி மற்றும் சேவைகளை சிறப்புத்தன்மை வாய்ந்ததாக வழங்கும் நிறுவனமாக இலங்கையில் திகழ்வதற்கு, இலங்கையிலுள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு, குறித்த சம்மேளனம், ஊக்குவிப்பு வழங்கி வருகின்றது.
“இந்த வெற்றியைப் பெற்றமைக்கு, நிபொன் பெயின்ஸ் பெருமை கொள்வதுடன் மகிழ்ச்சியடைகின்றது. இந்த விருதானது, இலங்கையில் மாத்திரமல்லாது, ஆசியாவிலேயி மிகப்பெரிய பெயின்ஸ் உற்பத்தி நிறுவனம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், இலங்கைக்கு சிறந்த உற்பத்தியை வழங்கும் நிறுவனம் நாமே, என்ற உறுதியை இது வழங்குவதோடு, எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்க்கு ஊக்குவிக்கின்றது” என்று, நிபொன் பெயின்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜ ஹேவாபௌவல தெரிவித்துள்ளார்.
“நீண்ட காலமாக இலங்கையில் நிலைத்திருக்கும் நாம், மக்களுக்கு சிறந்த தரமான உற்பத்திகளை வழங்கி வருகின்றமையால் தற்போது தேசிய அளவில் பாராட்டையும் பெற்றுள்ளோம்.” நிபொன் பெயின்ட்ஸ், மிகப்பெரிய வகை தயாரிப்பு மற்றும் மற்றைய உற்பத்திகள் என்ற குறிப்பிட்ட இரண்டு பகுதிகளில் அங்கிகாரம் பெற்று இரண்டு தங்க விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. தலைமைத்துவம், பெருநிறுவன ஆளுகை, கட்டடத்தின் கொள்ளளவு, செயல்திறன் மேலாண்மை, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையின் ஆய்வு, கூட்டாண்மை சமூகப்பொறுப்பு, சூழல் பேண்தகைமை, வர்த்தக மற்றும் நிதி முடிவுகள் போன்ற எட்டு மதிப்பீட்டு அடிப்படையின் கீழ் இந்த விருது தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.“வீட்டுத்துறைக்கும் இந்தத்துறைக்கும் தரமான உற்பத்திகளையும் தேவைப்படும் உற்பத்திகளையும் வழங்கவேண்டும் என்பதையே, நாம் உறுதியாக கொண்டுள்ளோம்.
தொழில்நுட்பம், வாடிக்கையாளர் அக்கறை, போன்றவற்றினூடாக எமது உற்பத்திக்கு பெறுமதிகளைச் சேர்த்து, புதிய சந்தையையும் சுற்றாடல் விழிப்புணர்வுகளையும் உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். சமீபத்தில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் நிகழ்வின் போது, நாம் பெற்ற தங்க விருதானது, எமது பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கும் சந்தைக்காக நாம் வழங்கும் அர்ப்பணிப்பையும் உத்தரவாதப்படுத்துகின்றது.” என்று நிபொன் பெயின்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் நேமந்த அபேசிங்க தெரிவித்துள்ளார்.
25 minute ago
40 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago
40 minute ago
44 minute ago