Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 700 கிலோவோட் நீர்மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதற்கு ஜப்பானின் சீரோ ப்ளஸ் கம்பனி லிமிட்டெட் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் உள்நாட்டு பங்காளராக TAD லங்கா இன்வெஸ்ட்மன்ட்ஸ் இயங்கவுள்ளது. இந்ததத் திட்டத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியின் எரத்னா பகுதியில் இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இந் நீர்மின் உற்பத்தி நிலையம் தனது செயற்பாடுகளை 2017 ஓகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“இலங்கையின் மின்சார உற்பத்தி நீர்மின் உற்பத்தியில் தங்கியுள்ள போதிலும், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் ஏரிகள், வாவிகள் மற்றும் ஆறுகள் போன்வற்றை பயன்படுத்தி நீர்மின் உற்பத்தி நிலையங்கள் பலதை நிறுவுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகிறது” என சீரோ ப்ளஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெலிசிரோ யடொமி தெரிவித்தார்.
இந்நிறுவனம் வாசனைத்திரவியங்கள் உற்பத்தி மற்றும் தபால் ஊடாக ஓடர் செய்யும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செயற்பாடுகளினூடாக நாட்டின் நீர் மின் உற்பத்தித்துறையில் மேலும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago