2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நூல் அலங்காரங்களை காட்சிப்படுத்திய A & E Lanka

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி ஆடை நூல்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமமான American & Efird LLC, USA இன் அங்கத்துவத்தைப் பெற்ற American & Efird (A&E) Lanka நிறுவனம், கலை அலங்கார தோற்றப்பாட்டை நூல்களை கொண்டு வடிவமைத்திருந்ததுடன், இதை கொழும்பில் இடம்பெற்ற ‘Swim’ by Colombo Fashion Week (CFW) நிகழ்வில் பல பார்வையாளர்கள் மத்தியில் காட்சிப்படுத்தியிருந்தது. 

'Thread in Life' எனும் தலைப்பில் இந்த நூல் அலங்காரம் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், 100,000 மீற்றர்களுக்கு அதிகமான A&E நூல்கள் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு புத்தாக்க கலைஞரான நளின் ஜயசேனவினால் இந்த கலை அம்சம் 15 லேயர்களை கொண்ட கிளாஸில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த CFW நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு A&E வர்த்தக நாமத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது, இவர்களின் பங்குபற்றல்களைக் கொண்ட புகைப்படங்கள் Facebook, Instagram அல்லது Twitter ஆகியவற்றில் 'ThreadMe' எனும் சொற்தொடரில் பகிரப்பட்டிருந்தன. இவ்வாறு பகிரப்பட்ட படங்கள் அனைத்தும் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்கு A&E அணியினரிடமிருந்து அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்ததுடன், தொடர்ச்சியான இந்த படங்களை அவர்கள் மேற்பார்வை செய்த வண்ணமிருந்தனர். 

A&E லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரியந்த அளுத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், 'முதன் முதலாக இடம்பெற்ற CFW Swim நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. இதில் துறைசார் சிறந்த பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வின் பிரதான பங்காளராக கைகோர்த்திருந்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். #ThreadMe செயற்பாட்டுக்கு கிடைத்த வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது' என்றார். 

'இந்த CFW நீச்சல் ஆடை நிகழ்வு, எவ்வித சந்தேகமுமின்றி அதிகளவு உலகத்தரம் வாய்ந்த கலைப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தது. பெருமளவான நீச்சல் ஆடை அலங்கார வடிவமைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இதன் மூலம் இலங்கையின் திறமை மற்றும் இயலுமைகள் உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லப்பட்டிருந்தது. எதிர்காலத்திலும் இது போன்ற செயற்திட்டங்களுடன் கைகோர்க்க நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

நீச்சல் ஆடைகளில் புரட்சி ஏற்படுத்தப்படுகின்றமை என்பது மிகவும் ஆச்சரியமூட்டும் விடயமாகும், இதன் வரலாறு என்பது நவீன காட்சி அமைப்புகள் CFW Swim நிகழ்வில் பாரிய திரையில் A&E Lanka வினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

உலகின் மாபெரும் நூல் உற்பத்தி மற்றும் விநியோகத்தர்களான A&E லங்கா, நவீன உற்பத்தி பொறிமுறைகள் மற்றும் தரத்துக்கு பூரண அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. தையல் நூல் வகைகளுக்கு இலங்கையில் பெருமளவான பங்கை A&E லங்கா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A&E Lanka நிறுவனம், 120 வருடங்களுக்கு மேலாக ஆடை வியாபாரத்தில் ஆதிக்கவம் வகித்து வருகின்றது. மேலும் இந்நிறுவனம் திட்டமிடப்பட்ட விநியோகம், தொடர்ச்சியான மற்றும் நீடிப்புத் தன்மை, உச்சகட்ட செயல்முறை, அர்ப்பணிப்பு மற்றும் நெகிழ்வான சேவை மற்றும் பரந்த அளவிலான உற்பத்தி பிரிவு உட்பட முன்னணி தொழில்நுட்பங்களை கையாண்டு வருகின்றது. நிறுவனத்தின் சர்வதேச வலையமைப்பினூடாக இத்தயாரிப்புக்கள் 23 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு 50 நாடுகளில் விநியோகிக்கப்படுவதுடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X