2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நூலகம் அமைக்க இராணுவத்துடன் செலிங்கோ லைஃப் இணைவு

Gavitha   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியிலுள்ள ஒரு சிறிய அரசாங்கப் பாடசாலைக்கு நூலகம் ஒன்றை நிறுவுவதற்கான பங்களிப்பை வழங்க செலிங்கோ லைஃப் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன முன்வந்திருந்தன. தரம் 1- 11 வரை வகுப்புகளைக் கொண்டுள்ள 372 மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் கேஎன்/கனகாம்பிகைக்குளம் அரசாங்கத் தமிழ் கலவன் பாடசாலைக்கு கட்டடத்தைக் கட்டிக் கொடுக்க செலிங்கோ மற்றும் இராணுவத்தின் 57ஆவது பிரிவும் இந்தக் காரியத்தில் ஈடுபட்டன.

இலங்கையிலுள்ள கிராமப்புறப் பாடசாலை ஒன்றுக்கு  66ஆவது வகுப்பறையை நிர்மாணிப்பதற்கு, செலிங்கோ லைஃப் நிதியளித்துள்ளது. அதேவேளை இந்த வருடத்தில் கம்பனி நிறுவியுள்ள 2ஆவது அன்பளிப்புக் கட்டடம் இதுவாகும். செலிங்கோ லைஃப் 2004ஆம் ஆண்டு ஆரம்பித்த இத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு வரும் மேலும் 3 வகுப்பறைக் கட்டடங்கள் அடுத்த ஆண்டு பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன.

கிளிநொச்சியில் தளத்தைக் கொண்டுள்ள 57ஆவது இராணுவப் பிரிவு செலிங்கோ லைஃப் இன் நிதியளிப்பில் இடம்பெற்ற நூலகக் கட்டடத்தின் நிர்மாண வேலைகளை மேற்பார்வை செய்து வந்ததுடன் சரீர உதவியும் புரிந்துள்ளளது. பூர்த்தி செய்யப்பட்ட கட்டிடத்தைக் கையளிப்பதற்கான வைபவத்தில் 57ஆவது பிரிவின் தளபதி பிரிகேடியர் அனுர சுதசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 57ஆவது பிரிவு அதிகாரிகளும் வலயக் கல்விப் பணிப்பாளர் கே முருகவேள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X