Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 15 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவெட் லிமிட்டெட் தனது ஏழாவது கிளையை, இல. 186, நாவல வீதி, நாவல எனும் முகவரியில் திறந்து வைத்துள்ளது. அதிகளவு இடவசதிகளைக் கொண்ட இந்தப் புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், புதிய சீன உணவு வகைகளுடன், வாடிக்கையாளர்களின் சுவையரம்புகளுக்கு சிறந்த சுவையை வழங்கி மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
தாம் இயங்கும் பகுதிகளில் அதிகளவானோர் விரும்பி விஜயம் செய்யும் உணவகமாகத் திகழ்வது என்பது சைனீஸ் ட்ராகன் கஃபேயின் நோக்கமாகும். பம்பலபிட்டியில் ஆரம்பிக்கப்பட்டது முதல், 2007ம் ஆண்டு தனது இரண்டாவது கிளையை கல்கிசை பகுதியில் திறந்திருந்தது. மூன்றாவது கிளை 2010ம் ஆண்டு ராஜகிரியவிலும், நான்காவது கிளையை கொழும்பின் வியாபார மையப்பகுதியான உலக வர்த்தக மையத்துக்கு அருகில் நிறுவியிருந்தது. இதனைத்தொடர்ந்து தனது தலைமைக்காரியாலயத்தை ஹெந்தலை பகுதியிலும் திறந்திருந்தது.
ஐந்தாவது கிளை நீர்கொழும்பு வீதி, வத்தளையிலும், ஆறாவது கிளை பெலவத்தையிலும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. dine in, take away அல்லது delivery போன்ற சகல பிரிவுகளிலும் உயர் தரமான சேவையைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது சைனீஸ் ட்ராகன் கஃபே தனது வலையமைப்பில் 7 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், இதில் புதிய உள்ளடக்கமாக நாவல கிளை அமைந்துள்ளது.
30 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago