2025 மே 21, புதன்கிழமை

நவீனமயப்படுத்தப்பட்ட Nokia 8110 மீளறிமுகம்

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

  Nokia 8110 அலைபேசியை, 4G தொழில்நுட்பத்துடன் HMD மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 
பாவனையாளர்களுக்கு மிகவும் பரீட்சையமான அதன் வளைவான ஸ்லைடர் வடிவமைப்பை அவ்வாறே கொண்டுள்ளதுடன், பொழுதுபோக்குக்கு முதலிடம் தருகின்ற அதேவேளை, திறன்பேசி ஒன்றில் இருக்கும் அத்தியாவசியமான விசேட அம்சங்களை, எந்தவொரு நேரத்திலும் அனுபவிக்கும் ஆற்றலை வழங்குகிறது.

இந்த அலைபேசியின் Qualcomm® 205 அலைபேசி தளமானது, வேகமான அனுபவத்தை, பற்றரியின் ஆயுட்காலத்துக்கு எந்தவொரு பாதிப்​பையும் ஏற்படுத்தாது, உங்களுக்கு கொண்டுவருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர், 25 நாட்களுக்கு நம்பமுடியாத ஸ்டான்ட்பை காலம் இதனூடாகக் கிடைக்கிறது.

HMDஇன் இலங்கை விற்பனைப் பிரிவின் பிரதானி கயான் விஜேதிலக்க கருத்துத் தெரிவிக்கையில்,  “இலங்கையில் அலைபேசிப் பாவனை, நூற்றுக்கு 120ஐ விட அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

சனத்தொகையில் அதிக தொகையினர், நடமாடும் அலைபேசி சிம்களை அதிக அளவில் பாவிக்கிறார்கள். இலங்கையர்களில் பெரும்பாலானோர்கள் அலைபேசிகள் இரண்டைப் பாவிக்கும் அதிக சாத்தியங்கள் இப்போது எமக்குத் தெரிகிறது. 

பெரும்பாலான நேரங்களில் இவர்கள் விசேட அம்சங்களைக் கொண்ட அலைபேசியொன்றை தமது இரண்டாவது அலைபேசியாக அல்லது அழைப்புகள் மற்றும் SMS களுக்காக தமது பிரதான அலைபேசியாகவும் பாவிக்கிறார்கள்.

விசேட அம்சங்களைக் கொண்ட அலைபேசிகளிலுள்ள மிக நீண்ட பற்றரி ஆயுட்காலம் காரணமாக அலைபேசி அழைப்புகள் மற்றும் SMSகள் எந்தவொரு தடையுமின்றி நீண்ட காலம் பாவிக்க முடிதல், இதற்கான காரணமாகும்.

ஆரம்பத்தில் வந்த Nokia 8110 மாதிரியானது, உலகில் அதிகமாக விற்பனையாகிய அலைபேசியாகும். இதனை ஏற்கெனவே பாவித்தவர்களைப் போன்றே புதிய சந்ததியினரும் இந்த அலைபேசியின் எளிமையான இலகுவான அசல் தன்மையில் விருப்பம் கொண்டுள்ளனர்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X