2024 மே 03, வெள்ளிக்கிழமை

நியு அந்தனீஸ் குரூப் நிலைபேறான U.S. Soy இலச்சினை பொதியிடல் உரிமையைப் பெற்றுள்ளது

Freelancer   / 2023 ஜூலை 14 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோழி இறைச்சி உற்பத்தியாளர்களான நியு அந்தனீஸ் குரூப், நிலைபேறாண்மை தொடர்பான தனது முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக, தமது தயாரிப்புகளுக்கான பொதிகளில் நிலைபேறான U.S. Soy இலச்சினையைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. இதனூடாக, தெற்காசிய மற்றும் உப சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் முதன் முறையாக இந்த உரிமம் பெற்ற நிறுவனமாக நியு அந்தனீஸ் குரூப் திகழ்கின்றது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த அனுமதியைப் பெற்றுக் கொண்டமையைக் குறிக்கும் நிகழ்வு அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. நிலைபேறான U.S. Soy உற்பத்திகளை தமது தயாரிப்புகளில் பயன்படுத்துவோருக்கு நிலைபேறான U.S. Soy இலச்சினையை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் 550 க்கும் அதிகமான தயாரிப்புகளில் இந்த இலச்சினையைப் பயன்படுத்தும் 30 நிறுவனங்கள் வரிசையில் நியு அந்தனீஸ் குரூப் நிறுவனமும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புரதக் குறைபாடு தொடர்பில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுத் திட்டமான Right to Protein திட்டத்தின் புதிய ஆதரவாளராகவும் நியு அந்தனீஸ் குரூப் திகழ்கின்றது.

நிலைபேறான முறையில் பெறப்பட்ட soy களுக்காக துறையில் தங்க நியமமாக கருதப்படும் U.S. Soy Sustainability Assurance Protocol (SSAP) இனால் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இந்த இலச்சினையைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. உயிரியல் பரம்பல் மற்றும் உயர் காபன் இருப்பு, உற்பத்தி செயன்முறைகள், பொது மற்றும் ஊழியர் சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் போன்ற நான்கு அம்சங்களை SSAP வலியுறுத்துகின்றது.

U.S. Soybean Export Council (USSEC) இனால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தினூடாக, சர்வதேச உணவு மற்றும் தீன் நிறுவனங்களுக்கு நிலைபேறான முறையில் soy ஐ திரட்டி, தமது மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு பிரிவுகளில் உள்வாங்குவதற்கு உதவியாக அமைந்துள்ளது.

நியு அந்தனீஸ் குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர வரவேற்பு உரையில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது தயாரிப்புப் பொதிகளில், நிலைபேறான U.S. Soy இலச்சினையைப் பயன்படுத்துவதற்கு எமது அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இது ஒரு சாதாரண இலச்சினை என்பதற்கு அப்பாலானது, நிலைபேறான மூலப்பொருட்களை தேடிப் பெறுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது. நிலைபேறாண்மை என்பது பண்ணையில் ஆரம்பிக்கின்றது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுடன், நிலைபேறாண்மைக்கான எமது பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.” என்றார்.

இந்நிகழ்வில் U.S. Soy நிலைபேறாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் – தெற்காசியா மற்றும் உப சஹாரா ஆபிரிக்கா தலைமை அதிகாரி தீபா ஜியன்னொலிஸ் கலந்து கொண்டதுடன், U.S. Soy தொடர்பான விளக்கத்தையும், நிலைபேறான மற்றும் தங்கியிருக்கக்கூடிய உணவு மூலங்களை உருவாக்குவதற்கான சர்வதேச ரீதியிலான பங்களிப்பு தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார். USSEC பிராந்திய விலங்கு நுகர்வு தலைமை அதிகாரி – தெற்காசியா மற்றும் உப சஹாரா ஆபிரிக்க பிராந்தியம் கலாநிதி. சுசில் சில்வாவும் இந்த நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

நியு அந்தனீஸ் குரூப் தவிசாளர் எமில் ஸ்டான்லி நிறுவனத்தின் நீண்ட பயணம், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இலங்கையை ஆரோக்கியமான தேசமாகத் திகழச் செய்வதில் பல்வேறு பெறுமதிகள் தொடர்பில் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தார். நிகழ்வின் நன்றி உரையை நிறைவேற்றுப் பணிப்பாளர் எரங்க குருகுலஆரச்சி வழங்கியிருந்தார்.

ஒழுக்கமான மற்றும் நிலைபேறான செயற்பாடுகளை பின்பற்றுவதில் நியு அந்தனீஸ் குரூப் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதன் பசுமை கோழி முறைமைக்காக புகழ்பெற்றுள்ளது. ISO 14064-1:2018 நியமங்களின் பிரகாரம் Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தலைப் பின்பற்றி உற்பத்தியில் ஈடுபடும் ஒரே நிறுவனமாகவும் திகழ்கின்றது. கடந்த ஆண்டில், தனது கோழி இறைச்சி உற்பத்திகளில் உக்கும் பொதியிடல் தீர்வை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது. 2019 ஆம் ஆண்டு முதல் தொழிற்துறையில் கோழி இறைச்சி உற்பத்திகளை உக்கும் பொதிகளில் பொதியிடும் முறையை பின்பற்றுவதற்கு ஊக்குவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .