Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடெல் மற்றும் சொஃப்ட்லொஜிக் மெக்ஸ் இணைந்து, உலகத் தர முத்திரைகளை உள்ளடக்கிய விற்பனையகத்தை நீர்கொழும்பில் திறந்து வைத்துள்ளன.
வாடிக்கை யாளர்களுக்காக உலகத் தரம் வாய்ந்த வர்த்தக முத்திரைகளுடன் கூடிய வாழ்வியல் பொருள்களை வழங்கும் ஒடெல், சொஃப்ட்லொஜிக்கின் இலத்திரனியல் பொருள்கள் என்பனவற்றை உள்ளடக்கிய 18,220 சதுர அடி, பரப்பைக் கொண்ட இந்தப் புதிய காட்சியகம் இலக்கம் 221, கொழும்பு வீதி, நீர்கொழும்பு என்ற முகவரியில் அமைந்துள்ளது.
இது ஒடெல்லின் 24ஆவது காட்சியகமாகும். அதேபோல் சொஃப்ட்லொஜிக் மெக்ஸின் 19ஆவது காட்சியகமாகும்.
இந்தப் புதிய ஒடெல் காட்சியகம், நீர்கொழும்பு வாழ் மக்களுக்கு உன்னதமான பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்கவுள்ளது.
மகளிர் ஆடைகள், ஆடவர் ஆடைகள், பெக்ஸ்டேஜ், டிலைட், LUV SL, சர்வதேச சன்கிளாஸ்கள், கைக்கடிகாரங்கள், சிறுவர் ஆடைகள், விளையாட்டு ஆடைகள், பொதிகள் என எல்லாப் பிரிவுகளும் ஒடெல் பகுதியில் அமைந்துள்ளன. வாடிக்கையாளர் வசதி, நேர்த்தி என்பனவற்றைக் கருத்தில் கொண்டு, மிக அற்புதான முறையில் தரை வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச நவநாகரிக முத்திரைகள் அனைத்துடனும் உள்ளூர் தரம் வாய்ந்த உற்பத்திகளையும் உள்ளடக்கியதாக, வழக்கமான ஒடெல் பண்புகளை உள்ளடக்கியதாக, நீர்கொழும்பு காட்சியகம் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago