Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குளிரூட்டி உபகரணமொன்றை அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நன்கொடையாக வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஒரு முக்கியமான வைத்தியசாலையாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை திகழ்ந்து வருவதுடன், நீர்கொழும்பையும், சுற்றுப்புற கிராமங்களையும் சேர்ந்த நோயாளர்களுக்கு சேவைகளை வழங்கும் பிரதான சிகிச்சை மையமாகவும் அமைந்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவற்றுக்கு இந்த வைத்தியசாலை சேவைகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் 200 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் 150 குருதிக் கொடையாளிகளுக்கு சேவைகளை ஆற்றி வருகின்ற வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இக் குளிரூட்டல் இரத்த சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரத்த வங்கிகள் தமது சேவையின் தரத்தை பேணுவதற்கு குளிரூட்டப்பட்டிருப்பது மிகவும் அத்தியாவசியமானது. மேம்படுத்துவதற்கு இரத்த வங்கியின் ஆற்றலை மேம்படுத்தும் இந்த உபகரணமானது அதன் நோயாளர்கள் மற்றும் குருதிக் கொடையாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் உதவியை இன்னும் மகத்தான மட்டங்களுக்கு எடுத்துச் செல்ல இரத்த வங்கிக்கு உதவும்.
அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான மங்கள பண்டார, அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் சந்தை முகாமைத்துவத்திற்கான உதவிப் பொது முகாமையாளரான சமந்த குணவர்த்தன மற்றும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் ஏனைய பல பிரதிநிதிகள் முன்னிலையில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கானி சுப்பிரமணியம் அவர்கள் இந்த உபகரணங்களை கையளித்து வைத்துள்ளார். தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளரான வைத்தியர் லக்ஷ;மன் எதிரிசிங்க, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் நிர்மலா லோகநாதன், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று வைத்திய நிபுணரான வைத்தியர் ஆஷh டி அல்விஸ் மற்றும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் முன்னாள் மருத்துவப் பொறுப்பதிகாரியான வைத்தியர் நிமேஷ; பத்திரண ஆகியோரும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
45 minute ago