2024 மே 03, வெள்ளிக்கிழமை

நெஸ்லே தென்னை வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக 500 குடும்பங்கள் பயனளித்துள்ளன

Editorial   / 2023 ஜூன் 26 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே லங்காவின் தனித்துவமானதொரு சமூக அபிவிருத்தித் திட்டமான நெஸ்லே தென்னை வளர்ப்புத் திட்டம் அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, மத்திய மாகாணத்தில் உள்ள 500 கிராமப்புற குடும்பங்கள் பயனடைவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இலங்கை தென்னைப் பயிர்ச்செய்கை சபையுடன் இணைந்து ஏழாவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, இலங்கையில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் நோக்குடன் தமது வீடுகளில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் 4,500 பேருக்கு கலப்பின தென்னங் கன்றுகள் மற்றும் ஏனைய வளங்களை வழங்குகின்றது.

நிக்கவெரட்டிய, கெபித்திகொல்லாவை, அரலகங்வில, ஹொரவப்பொத்தானை, கந்தளாய் மற்றும் அரந்தலாவை ஆகிய இடங்களில் மாதிரி பண்ணைகளை நிறுவி, தென்னைப் பயிர்ச்செய்கையின் சிறந்த நடைமுறைகள் குறித்து பயனாளிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் இத்திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ஏழாவது மற்றும் சமீபத்திய மாதிரிப்பண்ணை கந்தளமவில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த அரச-தனியார் கூட்டாண்மை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் தலைவரான திருமதி மாதவி ஹேரத் அவர்கள், “நெஸ்லே தென்னைப்பயிர்ச்செய்கைத் திட்டத்தை மென்மேலும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவுபடுத்துவதில் நான் மிகுந்த பெருமையுடனும், நன்றியுடனும் உள்ளேன்.

இந்த நன்முயற்சியானது கடந்த பல ஆண்டுகளாக, பாரம்பரியமற்ற தென்னைப் பயிர்ச்செய்கைப் பிரதேசங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளமாக விளங்குகிறது. இது பயிர்ச்செய்கை நுட்பங்களை மேம்படுத்தவும், சவால்களை எதிர்கொள்ளவும், தென்னைப் பயிர்ச்செய்கைக்கான புதிய வழிமுறைகளை ஆராயவும் உதவியது,” என்று குறிப்பிட்டார்.

“எமது நீண்டகால தென்னை அபிவிருத்தித் திட்டம், இலங்கையில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான எமது ஓயாத அர்ப்பணிப்பிற்குச் சான்றாகும். நாட்டில் தேங்காய்ப் பால்மாவின் மிகப் பாரிய ஏற்றுமதியாளர் என்ற வகையில், பல்வேறு பிரதேசங்களில் வீடுகளில் தென்னைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன். அத்துடன், நாட்டில் பல்லாயிரக்கணக்கான தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களிடமிருந்து நாம் தேங்காயைக் கொள்முதல் செய்கிறோம், இலங்கை தென்னைப் பயிர்ச்செய்கை சபை மற்றும் எமது நெஸ்லே தென்னை அபிவிருத்தித் திட்டக் குடும்பங்களுடன் இணைந்து, இந்த விலைமதிப்பற்ற பயிரின் உண்மையான திறனை நாம் தொடர்ந்து வெளிக்கொண்டுவருவோம்.

பூமிக்கும் நன்மைபயக்கும் வகையில் மீளுருவாக்க விவசாய நடைமுறைகள் அடங்கலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தென்னைப் பயிர்ச்செய்கையில் தன்னிறைவு அடையவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு தென்னை தொழில்துறை மற்றும் பொருளாதாரத்திற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் உழைக்கும் இந்தத் திட்டத்தையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம்," என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. பெர்ன்ஹார்ட் ஸ்டீஃபன் அவர்கள் கருத்து வெளியிட்டார்.

நெஸ்லே நிறுவனம் இலங்கையில் 115 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 8,000 க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்வதன் மூலம் ஆதரிக்கிறது. மேலும் அதன் தென்னை அபிவிருத்தித் திட்ட பயனாளர்களுக்கு மேலதிகமாக, உள்நாட்டு தேங்காய்த் தொழில்துறைக்கு பல பில்லியன்களை பங்களித்து வருகிறது. இந்நிறுவனம் கிராமப்புற சமூகங்களின் நல்வாழ்வை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளின் போதும், நாம் தொடர்ந்து தேங்காய்களை கொள்வனவு செய்தோம். அதன்மூலமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 90 மில்லியனுக்கும் மேல் புத்தம்புதிய தேங்காய்களை கொள்வனவு செய்ய முறையே ரூபாய் 6 பில்லியன் மற்றும் ரூபாய் 6.8 பில்லியன் தொகைகளை செலுத்தியுள்ளது. தனது அயராத முயற்சியால், இந்நிறுவனம் 2022 இல் ரூபாய் 14.3  பில்லியன் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டி, இலங்கையின் பொருளாதாரத்திற்கு சாதகமானபங்களிப்பை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .