Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, தனது பணிப்பாளர் சபையில் புதிய அங்கத்தவராக சவந்த் செபாஸ்டியனை 2018 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதாரம், நிதிச் சேவைகள், முதலீட்டு வியாபாரம் போன்ற பிரிவுகளில் பெருமளவு அனுபவத்தை செபாஸ்டியன் தன்வசம் கொண்டுள்ளதுடன், ஆர்பிகோ அடரக்ஸியா அஸெட் மனேஜ்மன்ட், சப்வே டிவலப்மன்ட் ஆகியவற்றின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் செயலாற்றி வருகிறார்.
பதினைந்து வருடங்கள் துறைசார் அனுபவத்தை செபாஸ்டியன் தன்வசம் கொண்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் வங்கியின் சர்வதேச சந்தைகள் ஆய்வு அணியில் சிரேஷ்ட பொருளாதார வல்லுநராக ஒன்பது வருடங்கள் பணியாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் அரசாங்கங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதுடன், உயர் நிகர பெறுமதி வாய்ந்த தனியார், நிறுவனசார் வாடிக்கையாளர்களுக்கும், உள்ளக பங்காளர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவற்றில் கொலோனியல் ஃபர்ஸ்ட் ஸ்டேட், கொமன்வெல்த் வங்கி சிரேஷ்ட தலைமைத்துவ அணி போன்றன அடங்குகின்றன.
இதற்கு முன்னதாக, நான்கு ஆண்டுகள், கொமன்வெல்த் செகியுரிட்டீஸில் சர்வதேச வியாபார பிரிவை நிர்வகித்திருந்தார். இதனூடாக 31 சர்வதேச சந்தைகளில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். இந்த பதவியில் மூலோபாய வியாபார கணக்குகளுக்கு பொறுப்பாக செயலாற்றியிருந்ததுடன், கொமன்வெல்த் வங்கி அவுஸ்திரேலியாவின் திறைசேரிக்கு இடர்களை கையாளவும், மாற்று வருமான மூலங்களை கையாளவும் உதவியாக அமைந்திருந்தது.
Actuarial Studies & Finance இல் வர்த்தக இளமானிப் பட்டத்தை இவர் கொண்டுள்ளதுடன், அவுஸ்திரேலிய பங்குப்பரிவர்த்தனையின் அங்கிகாரம் பெற்ற ஆலோசகராகவும் அமைந்துள்ளார். அவுஸ்திரேலிய பங்கு முகவர்கள், நிதி ஆலோசகர்கள் சம்மேளனத்தின் பிரதம செயற்பாட்டாளராகவும் அமைந்துள்ளார்.
துறைசார் வாடிக்கையாளர்களுக்கு பங்குச்சந்தைகள் பற்றி உள்ளக, சர்வதேச பாரிய பொருளாதார கொள்கை, ஆய்வு அறிக்கைகளை செபாஸ்டியன் வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago