Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேஷன்ஸ் ட்ரஸ்ட் பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காளராகக் கைகோர்த்துள்ளது. இதனூடாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தாக்கமான ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் துறையின் முன்னோடியாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது செயற்பாட்டுத் தளத்தை விஸ்தரித்துள்ளதுடன், பரந்தளவு வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூனியன் அஷ்யூரன்ஸின் முதலாவது பாங்கசூரன்ஸ் பங்காளராக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி திகழ்கிறது. 2008 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த இந்தப் பங்காண்மை, பாரிய பங்காண்மையாக வளர்ச்சியடைது இருந்ததுடன், இரு நிறுவனங்களுக்கும் நேர்த்தியான பெறுபேறுகளை வழங்கியுள்ளது.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையினூடாக, பாங்கசூரன்ஸ் துறையில் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் பல சாதனைகளைப் புரிவதற்கு வழிகோலுவதாக அமையும் எனக் கருதப்படுகிறது.
இந்த பங்காண்மை பரஸ்பரம் அனுகூலமளிக்கும் உடன்படிக்கையாக அமைந்துள்ளதுடன், தனது கிளைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்துள்ளது.
காப்புறுதி வழங்குநருக்குப் பரந்தளவு வாடிக்கையாளர்களைச் சென்றடைய ஏதுவாக அமைந்துள்ளதுடன், துறையின் முன்னோடியான வாடிக்கையாளர் சேவை நியமங்களைப் பேணவும் உதவியாக அமைந்துள்ளது.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரேணுகா பெர்னான்டோ இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பரிபூரணமான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கவனம் செலுத்துகிறது. இந்தப் பயணத்தில் யூனியன் அஷ்யூரன்ஸுடன் கைகோர்ப்பதையிட்டு, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக்கூடியதாக இருக்கும்” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் துறையில் முன்னோடி எனும் வகையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக எமது தீர்வுகளையும் சேவைகளையும் தொடர்ச்சியாக மீளமைத்து வருகிறோம். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடனான இந்தப் பங்காண்மையூடாகத் துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்த எமக்கு உதவியிருந்தது. இது இரு நிறுவனங்களுக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். எமது வாடிக்கையாளர்களுக்கும் அனுகூலமாக அமைந்திருக்கும்” என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago