2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிஎல்சி கிளைகள் அங்குரார்ப்பணம்

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, தனது 101ஆவது மற்றும் 102ஆவது கிளைகளை வலஸ்முல்ல மற்றும் கிண்ணியா நகரங்களில் அங்குரார்ப்பணம் செய்திருந்ததைத் தொடர்ந்து, 103ஆவது கிளையை வரகாபொல நகரில் (177, கண்டி வீதி, வரகாபொல) வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்தது.  

இந்தப் புதிய கிளையை பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளருமான டி.பி.குமாரகே மற்றும் நியமிக்கப்பட்ட (Designated) பிரதம நிறைவேற்று அதிகாரி சப்ரி இப்ரஹிம் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்திருந்ததுடன், நிகழ்வில் நிறுவன சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள், விசேட அதிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி தனது 100ஆவது கிளையை, 2016 டிசெம்பர் மாதம் ஹங்வெல்ல நகரில் அங்குரார்ப்பணம் செய்திருந்ததைத் தொடர்ந்து, வலஸ்முல்ல, கிண்ணியா, கலென்பிந்துனுவௌ மற்றும் ஹிங்குராக்கொட ஆகிய நகரங்களில் கிளைகளையும் சேவை நிலையங்களையும் அங்குரார்ப்பணம் செய்துள்ளது.  

1996ஆம் ஆண்டு நிறுவனத்தின் முதலாவது கிளை, கண்டி மக்கள் வங்கி வளாகத்தில் செயற்பட ஆரம்பித்திருந்தது.  

103ஆவது கிளை வரகாபொல நகரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தைத்தொடர்ந்து, நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் லயனல் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில், பீப்பள்ஸ் லீசிங் தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்கண்டு, அவற்றுக்கு பொருத்தமான வகையில் சௌகரியமான சேவைகளை பல தசாப்த காலமாக வழங்கி வருகிறது என்றார்.   

“சகல குடிமக்களுக்கும் அனுகூலம் சேர்க்கும் வகையில், எமது கிளை வலையமைப்பை நாடு முழுவதுக்கும் விஸ்தரிப்பது என்பது எமது நோக்காக அமைந்துள்ளது. அதிகளவு இடவசதி படைத்த, நவீன வசதிகள் கொண்ட கிளை ஒன்று, நகரில் காணப்படும் போது, அதனூடாக சௌகரியமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இதை இலக்காகக் கொண்டு நாட்டின் ஒவ்வொரு பிரதான நகரத்திலும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X