Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 16 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தீர்வை 2017ஆம் பாதீட்டில் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அதிகரிப்பு ஏதும் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தமக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாகவும், ஆனாலும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டப் பாதீட்டில் வாகனங்களின் இறக்குமதித் தீர்வைகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை மேற்கொண்டுள்ளமைத் தமக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மோட்டார் வாகனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரீஸா ரவுஃப் தெரிவித்தார்.
உதாரணமாக 1,000 CC வலு கொண்ட கார் ஒன்றுக்கு 5,000 அமெரிக்க டொலர் அலகுக்கு செலவீனம், காப்புறுதி மற்றும் போக்குவரத்துத் தீர்வை 1,500 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சராசரியாக சுமார் 250,000 ரூபாய் வரையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரிப்பெறுமதி மட்டும் 34சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்யவுள்ளது என குறிப்பிட்டார்.
புதிய வரி விதிமுறையின் பிரகாரம், 2,000 CC வலு கொண்ட வாகனமொன்றை நபர் ஒருவர் கொள்வனவு செய்யத் திட்டமிடின், அலகு பெறுமதி 4,500 ரூபாயிலிருந்து 5,500 ரூபாயாக அதிகரிக்கும். இது சுமார் 2 மில்லியன் ரூபாய் வரை வரி அதிகரிப்புக்கு காரணமாக அமையும் என்றார்.
மேலும், புதிய வரி முறையின் பிரகாரம், குறிப்பிட்ட 3,000 CC திறன் கொண்ட வாகனங்களின் வரிகளில் மட்டும் குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் இந்த நிலை ஒருசாராருக்கு மாத்திரம் அனுகூலம் வழங்குவதாக அமைந்துள்ளதாக ரவுஃப் குறிப்பிட்டார்.
இந்த நிலை தொடருமாயின் நாட்டில் காணப்படும் வாகன இறக்குமதியாளர்கள் வாகன காட்சியறைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன், பலருக்கு தமது வேலை வாய்ப்புகளையும் இழக்க நேரிடும் என தெரிவித்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே இறக்குமதிக்காகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஏற்படப் போகின்ற விலை அதிகரிப்புக்கு யார் பொறுப்புக்கூறுவார்கள் எனவும் கோரியிருந்தார்.
22 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago