Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 21 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
Diesel & Motor Engineering PLC (DIMO) தனது விசேட பயிற்சி மையமான DIMO மோட்டார் வாகன பயிற்சிக் கல்லூரியை வெலிவேரிய, கிரிந்திவெல வீதியில் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு இடம் மாற்றியுள்ளது.
இந்த மையம் இடம்மாற்றப்பட்டு, அதன் திறப்பு விழா இடம்பெற்ற சமயத்தில், அதனுடன் இணைந்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 மாணவர்களை உள்ளடக்கிய சமீபத்தைய தொகுதி இந் நிலையத்தின் பட்டதாரிகள் மற்றும் அனைத்தும் மாணவிகளைக் கொண்ட ஆறு பேர் அடங்கிய தொகுதி பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்காக 1990ஆம் ஆண்டில் தனது சேவையை ஆரம்பித்த DATS) Mercedes-Benz மோட்டார் வாகன பயிற்சிக் கல்லூரி (DATS) Mercedes-Benz வாகனங்களின் தலைமை நிறுவனமான ஜேர்மனி Daimler AG இன் பங்குடமையுடன் இணைந்து, பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கிவருகின்ற ஒரு நவீன பயிற்சி மையமாகும். தொழிற்பயிற்சிக் கல்வி மீது DIMO கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் பலனாக 2010 ஆம் ஆண்டில் மற்றுமொரு பயிற்சிக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
ஷஅனைத்து மாணவர்களும் சௌகரியமாகவும், போதிய இட வசதி கொண்ட சூழலிலும் கற்றலை முன்னெடுப்பதற்கான நவீன வசதிகள் அனைத்தையும் DATS கொண்டுள்ளது. பூரண உபகரண வசதிகளைக் கொண்ட 3 விரிவுரை அறைகள், நவீன இலத்திரனியல் ஆய்வுகூடம், வாகன திருத்த வேலைகளுக்கான விசாலமான வேலைத்தளம், அடிப்படை உலோக வேலைப் பயிற்சிக்கான விசாலமான வேலைத்தளம், Mercedes-Benz மோட்டார் கார்களின் திருத்த வேலைகளுக்கான விசேட உபகரணங்கள், உயர் தரம் கொண்ட அடிப்படை கை உபகரணத் தொகுதிகள், Mercedes வகுப்பு வாகனங்களுக்கான விசேட இலத்திரனியல் முறைமை பழுது கண்டறியும் உபகரணம் மற்றும் TATA போன்ற ஏனைய வர்த்தகநாமங்களுக்கான பொதுவான இலத்திரனியல் முறைமை பழுது கண்டறியும் உபகரணம் ஆகிய வசதிகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன.
மோட்டார் வாகன எந்திரவியல் மீது கவனம் செலுத்தியுள்ள தொழிற்பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி மற்றும் ‘நவீன தொழில்நுட்ப பயிற்சி’ தொடர்பான பல்வேறுபட்ட பாடநெறிகளை வழங்குகின்ற நவீன தொழில்நுட்ப பயிற்சி ஆகியன DATS தற்போது வழங்கிவருகின்ற பாடநெறிகளுள் உள்ளடங்கியுள்ளன.
மோட்டார் வாகன எந்திரவியல் பாடநெறியை பூர்த்தி செய்த பின்னர், கார் ஒன்றின் பாகங்களை அகற்றுதல் மற்றும் பொருத்துதல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் அளவுருக்களை அளவீடு செய்தல், கார் ஒன்றின் விற்பனைக்கு முன்னரான சோதனை மற்றும் பராமரிப்பு சேவைகளை முன்னெடுத்தல், கார் ஒன்றின் வயர் வேலைப்பாட்டு வரைபடத்தை வாசித்து அது தொடர்பாக புரிந்துகொள்ளல், கார் ஒன்றின் எந்த வகையான பழுதுபார்ப்புக்களையும் நவீன உபகரணங்களின் உதவியுடன் இனங்கண்டு, திருத்த வேலைகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறுபட்ட பணிகளை பட்டதாரிகள் முன்னெடுக்க முடியும்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago