2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

புற்றுநோயின் பின்னர் வாழ்க்கை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தது. இந்தச் செய்தி என்னைப் பெரிதும் பாதித்திருந்தது. ஆனாலும், இன்று நானிருக்கும் நிலையை பாருங்கள். மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஏனெனில், Mammogram பரிசோதனையினூடாக ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை இனங்கண்டு கொள்ள முடியும். இதன் காரணமாக எனக்கு chemotherapy அல்லது radiation சிகிச்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிடவில்லை.

இந்தப் பரிசோதனையில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பில் பெண்களுக்கு விளக்கமளிப்புகளை வழங்க நான் எதிர்பார்க்கிறேன்” என மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரான சந்தியா ஜயசூரிய தெரிவித்தார். பெண்களில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக அமைந்துள்ள மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முழுமையாகக் குணமடைந்தவர்களில் சந்தியாவும் ஒருவர்.   

4ஆவது Can-Sur- Vive பயிற்சிப்பட்டறை லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது சன்டி போன்ற மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சமூகத்தில் ஆற்றும் பங்களிப்பு குறித்த விடயங்கள் பற்றி ஆராயப்பட்டிருந்தது. Can-Sur-Vive நம்பிக்கை நிதியம் என்பது லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சியின் புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் நயோமால் பெரேராவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் சமூகப்பொறுப்புணர்வு செயற்றிட்டமாகும்.

இவர் ஒவ்வொரு காலாண்டிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் நலன் கருதி சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகிறார். இவ்வாறு உயிர் பிழைத்தவர்கள் பலருக்கு தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, அவசியமான வழிகாட்டல்கள் ஆலோசனைகள் போன்றன இந்த நிகழ்ச்சிகளினூடாக வழங்கப்படுவதே இதன் பிரதான நோக்கமாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .