Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை மாவட்ட வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பொன்று, கொமர்ஷல் வங்கியால் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இதற்கு முன்னர் விவசாய இரசாயனங்களாலும் கழிவுகளாலும் மாசுபடுத்தப்பட்ட நீரைப் பெற்றுவந்த அவ்வைத்தியசாலைக்கு விடிவு கிடைத்துள்ளது. வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு அறக்கட்டளையால், வங்கியின் பசறைக் கிளை மூலமாக இது மேற்கொள்ளப்பட்டது.
பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான பசறை மாவட்ட வைத்தியசாலை, குறைந்தளவு வசதிகளுடன் நாளொன்று 500க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கிறது. ஆனால், பசறையின் ஏனைய பகுதிகளைப் போன்று வைத்தியசாலையும், சுத்தமான குடிநீர் வசதியின்றி அவதிப்பட்டது. பொருத்தப்பட்ட சரியான குடிநீர்ச் சுத்திகரிப்பு வசதி, விநியோகக் கட்டமைப்பு இல்லாததோடு, அங்கு மத்திய குடிநீர்ச் சுத்திகரிப்புக் கட்டமைப்பும் காணப்படாத நிலையில், அப்பகுதியில் தொற்றா நோய்களும் சிறுநீரக நோய்களும் அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தன என, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு மேலதிகமாக, அப்பகுதிப் பாடசாலை மாணவர்களின் நன்மைக்கான வேறு சில செயற்றிட்டங்களையும் கொமர்ஷல் வங்கி மேற்கொண்டிருந்தது. இதன்படி, பிபிலகம வித்தியாலயத்துக்கு இசைக் கருவிகளும் போட்டோப்பிரதி இயந்திரமொன்றும், கோணகலை தமிழ் வித்தியாலயத்துக்கு போட்டோப்பிரதி இயந்திரமொன்றும் கணினியொன்றும், பசறை மத்திய கல்லூரிக்கு இன்னொரு குடிநீர் விநியோகச் செயற்றிட்டமும் வங்கியால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புச் செயற்றிட்டங்கள், அவ்வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு அறக்கட்டளையால் இயக்கப்படுவதோடு, பிரதானமாக தகவல் தொழில்நுட்ப அறிவு, கல்வி, நீடிப்புத்திறன், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் செயற்படுகிறது.
5 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago