Gavitha / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகல பங்குதாரர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தம்மை அர்ப்பணித்துள்ள பிம்புத் ஃபினான்ஸ் பிஎல்சி, வாடிக்கையாளர்களுக்கும் சமூகங்களுக்கும் சௌகரியமான மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் வகையில் தனது செயற்பாடுகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிம்புத் ஃபினான்ஸ், சகல பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சுபீட்சத்தைக் கட்டியெழுப்புவது எனும் நோக்கத்துக்கமைய செயலாற்றி வருவதுடன், இலங்கை மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகத் திகழ்கின்றது. நாட்டில் இயங்கும் 41 நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் அமைந்துள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் 2012 ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகத் திகழ்வதுடன், சகல கூட்டாண்மை ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி செயலாற்றி வருகின்றது.
எமது மக்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில், நுண் நிதிச் சேவை வழங்குநராக செயற்பாடுகளை ஆரம்பித்த பிம்புத் ஃபினான்ஸ் தனது சேவை வழங்கல்களை பரந்தளவு நிதி வழங்கல், முதலீட்டுத் தீர்வுகள் வரையில் விஸ்தரித்து, நுகர்வோர் மற்றும் சிறிய, நடுத்தரளவு வியாபாரப் பிரிவுகளுக்கு வழங்கி வருகின்றது.
நாடு முழுவதிலும் சமூக பொருளாதார வலுவூட்டலுக்கு பங்களிப்பு வழங்குவதுடன், இலங்கையின் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் பிம்புத் ஃபினான்ஸ் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைகளை வழங்குகின்றது. இதில் தங்கக் கடன், சிறிய, நடுத்தரளவு வியாபார கடன்கள், நுண் நிதிச் சேவை, தனிநபர், வீடமைப்பு கடன்கள், குத்தகை, நிலையான வைப்புகள் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்றச் சேவைகள் அடங்கியுள்ளன.
பங்குதாரர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், பிம்புத் ஃபினான்ஸின் பிரதான ஆளுமைகளில் உறுதியான சேவைப் பதிவு மற்றும் நாடளாவிய கிளை வலையமைப்பு ஆகியன அடங்கியுள்ளன. நாடு முழுவதிலும் 22 மாவட்டங்களில் 47 அங்கிகாரம் பெற்ற பகுதிகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், சுமார் 150,000 வாடிக்கையாளர்களையும் தன்வசம் கொண்டுள்ளது.
பிம்புத் ஃபினான்ஸின் அனுபவம், ஆளுமை மற்றும் அர்ப்பணிப்பான அணியினர், வாடிக்கையாளர்களுக்கு தமது இலக்குகளை எய்துவதற்கு உதவும் வகையில் செயலாற்றி வருகின்றனர். வங்கியியல், நீதி, நிர்வாகம் மற்றும் நிதியியல் துறைகளில் அனுபவம் வாய்ந்த பணிப்பாளர்களால் தலைமைத்துவம், பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் போன்றன நீண்ட கால வளர்ச்சிக்கு உதவுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கான உறுதிமொழியை நிறைவேற்றுகின்றமைக்காக புகழ்பெற்ற நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமாகத் திகழும் பிம்புத் ஃபினான்ஸ், பல்வேறு விருதுகளையும் சுவீகரித்துள்ளது. அண்மையில் வெற்றியீட்டிய விருதுகளில், அமெரிக்காவின் இன்டர்நஷனல் பிரான்ட் கொன்சல்டிங் கோர்பரேஷனினால் வழங்கப்பட்ட “ஆசியாவின் நம்பிக்கையை வென்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் 2019 – இலங்கை பிராந்தியம்” விருது மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 55 ஆவது வருடாந்த நிதி அறிக்கைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களுக்கான (20 பில்லியன் ரூபாய் வரையான மொத்த சொத்துக்கள்) நிதி அறிக்கை விருதுகள் 2019 போன்றன அடங்கியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து எழுந்த சவால்கள் நிறைந்த சூழலுக்கு பிம்புத் ஃபினான்ஸ் குறைந்தளவான தாக்கங்களுடன் முகங்கொடுத்திருந்தது. குறிப்பாக சுற்றுலாத் துறையில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றமை காரணமாக பெருமளவு தாக்கங்களை குறைத்துக் கொண்டிருந்தது.
முழுத் தேசத்தையும் கொவிட்-19 தொற்றுப் பரவல் பாதித்துள்ள நிலையில், அதிகார அமைப்புகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு பிம்புத் ஃபினான்ஸ் நன்றி தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சவால்கள் நிறைந்த சூழலில் எமது வங்கியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர சகல பங்காளர்களின் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
பணப்பாய்ச்சலில் வீழ்ச்சி மற்றும் வட்டி வருமான இழப்பு போன்ற காரணிகளால் பிம்புத் ஃபினான்ஸின் இலாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதுவரையில் தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகியுள்ள 40000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கடன் மீளச் செலுத்தல் சலுகை வசதியை வழங்கி உதவிகளை வழங்கியுள்ளது.
பிம்புத் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ப. நிரஞ்ஜன் கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரத்தை கட்டியெழுப்பியுள்ளமையின் காரணமாக, துறையில் எழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க முடிந்துள்ளது. கடுமையான நிதி முகாமைத்துவம் மற்றும் தூர நோக்குடைய செயற்பாடுகளினூடாகவும், எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாகவும், எமது செயற்பாடுகளை துரிதமாக மீளமைத்து, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த தாக்கத்தை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. எமது நிறுவனத்தின் மீளௌல் மற்றும் நிதியியல் ஆரோக்கிய நிலை போன்றவற்றுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.” என்றார்.
இந்த உறுதியற்ற சூழலிலும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பிம்புத் ஃபினான்ஸின் ஒன்றிணைந்த மூலோபாயம் மற்றும் பிரத்தியேக வியாபார மாதிரி ஏதுவாக அமைந்துள்ளது. மூலதன உள்வாங்கல் தொடர்பிலான கோரிக்கையை இலங்கை மத்திய வங்கி தற்போது மீளாய்வு செய்த வண்ணமுள்ளது. நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கடுமையான நிதி நிர்வாக செயற்பாடுகளினூடாக, ஜுன் – செப்டெம்பர் காலாண்டு பகுதியில் நிறுவனம் நேர்த்தியான பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. எதிர்காலத்தில் நிறுவனம் தொடர்ச்சியான வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
5 minute ago
10 minute ago
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
21 minute ago
34 minute ago