Editorial / 2018 நவம்பர் 16 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வர்த்தகத் துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களைப் பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா, அண்மையில் கொழும்பு, ஷங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டதுடன், சிறந்த வர்த்தக நிறுவனங்களைப் பாராட்டி விருதுகளையும் வழங்கி வைத்தார்.

“பிஸ்னஸ் டுடே டொப் 30” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது விழாவில், வர்த்தகத் துறையில் 2017, 2018 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அடைவுகளை வெளிக்காட்டிய 30 வர்த்தக நிறுவனங்கள் பாராட்டப்பட்டன.
தேசிய பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்து, நாட்டின் எதிர்காலத்துக்காகத் தொடர்ச்சியாகத் தமது தனிப்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ள கீர்த்திமிக்க தனிநபர்களும் இதன்போது பாராட்டைப் பெற்றனர்.
இலங்கை வர்த்தகத் துறையில் முக்கிய அடைவுகளை வெளிக்காட்டிவரும் நிறுவனங்களைப் பாராட்டி, அரச தலைவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த வர்த்தக விருது விழா, ‘பிஸ்னஸ் டுடே’ சஞ்சிகையால் வருடா வருடம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் வர்த்தக துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026