Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் 2017/18 ஆண்டுக்கான ‘Tomorrow Shaping Today’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த நிதியறிக்கைக்கு 32ஆவது சர்வதேச ARC விருதுகள் வழங்கும் நிகழ்வில் நான்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
நிதியறிக்கைகளுக்கான, உலகின் முன்னணி விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாக சர்வதேச ARC விருதுகள் அமைந்துள்ளது. இந்நிகழ்வை அமெரிக்காவின் Mercomm, Inc. ஏற்பாடு செய்திருந்ததுடன், ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் இடம்பெற்றது.
சர்வதேச ARC விருதுகள் வழங்கும் நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் 2017/18 ஆண்டுக்கான நிதியறிக்கை பெற்றுக் கொண்ட நான்கு விருதுகளில், நிதிச் சேவைகள் பொது - நிதித் தரவுகள் - வெள்ளி விருது, நிதிச் சேவைகள் பொது - தலைவரின் கடிதம் - வெண்கல விருது, நிதிச் சேவைகள் பொது - எழுத்தாக்கம் - மிகச் சிறப்பு மற்றும் நிதிச் சேவைகள் பொது - உள்ளக வடிவமைப்பு மிகச் சிறப்பு ஆகியன அடங்கியிருந்தன.
இதற்கு முன்னதாக இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கையிடல் CMA சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு நான்கு பிரதான விருதுகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் கருத்துத் தெரிவிக்கையில், “நிதியறிக்கைகளை சிறந்த முறையில் மதிப்பீடு செய்யும் விருதுகள் வழங்கும் நிகழ்வாக சர்வதேச ARC விருதுகள் அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் நான்கு விருதுகளை பெற்றுக் கொண்டமையானது பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு மாபெரும் சாதனையாக அமைந்துள்ளது” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஒன்றிணைக்கப்பட்ட வியாபார மாதிரி, சமூக பொறுப்புணர்வான செயற்பாடுகள் போன்றன நிறுவனத்தின் நிதியறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ‘Tomorrow Shaping Today’ எனும் தலைப்பிலமைந்த 2017/18 நிதியறிக்கைக்கு ஒன்றிணைந்த அறிக்கையிடல் CMA சிறப்பு விருதுகள் 2018 நிகழ்விலும், சர்வதேச ARC விருதுகள் வழங்கும் நிகழ்விலும் கௌரவிக்கப்பட்டு உள்ளமையானது எமது நிறுவனத்தின் உறுதித் தன்மைக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
49 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago