2026 மார்ச் 21, சனிக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு Gratitude லோயல்டி அட்டை

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களுக்கு ‘Gratitude’ லோயல்டி அட்டை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் இந்த அட்டைகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.   

இந்நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பதில் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் சுமார் இரண்டு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது. இந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில், நிறுவனம் பெருவாரியான நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள், தனி வியாபாரிகள், தொழிற்சாலைகள், நிபுணர்கள், விவசாயத்துறை மற்றும் இதர பல துறைகளுடன் தனது 105 உறுதியான கிளை வலையமைப்பினூடாக செயலாற்றியுள்ளது.

‘Gratitude’ லோயல்டி அட்டை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் 30,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது. கோல்ட், பிளாட்டினம் மற்றும் சில்வர் ஆகிய லோயல்டி அட்டைகள் இவர்களுக்கு வழங்கப்படும்.  

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ‘Gratitude’ லோயல்டி அட்டை ஊடாக, வாகனங்கள் கொள்வனவு, ஆடைகள், பற்றரிகள், தளபாடங்கள், சுற்றுலாத் துறை, பூக்கள், மூக்குக்கண்ணாடி, தங்க ஆபரணங்கள், வாகன பராமரிப்பு சேவைகள், வாகன உதிரிப்பாகங்கள், வைத்தியசாலை கட்டணங்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் போது விசேட விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X