Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 22 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக, தனது பொத்துவில் கிளையை சமீபத்தில் இடமாற்றியது. வங்கியின் புதிய கிளை பிரதான வீதி, பொத்துவில் நகரம், பொத்துவில் 12 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது.
இடவசதி மிகுந்த புதிய கிளை, வங்கியின் வாடிக்கையாளர்களை விசேட கவனத்துடன் வரவேற்க அனுமதித்து, சிறந்த வாடிக்கையாளர் சேவையையும் அதிசிறந்த ஒட்டுமொத்த அனுபவத்தையும் உறுதி செய்கிறது.
புதிய கிளை, நகர மத்தியில் அமைந்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அனைத்து வங்கித் தேவைகளையும் இலகுவாகப் பூர்த்தி செய்ய, வாய்ப்புக் கிடைக்கிறது. செலான் வங்கி, பொத்துவில் கிளை தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வாடிக்கையாளர்களுக்காக திறந்து இருக்கும்.

செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள், வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்கத்துடன் செயற்படுகிறது.
சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 173 கிளைகள், நாடு முழுவதும் பரந்துள்ள 70 பண வைப்பு இயந்திரங்கள், 66 காசோலை வைப்பு இயந்திரங்கள், 216 ATMகள் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.
‘பிற்ச்’ மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘A (LKA)’ என ஒப்புதல் அளித்து, செயற்றிறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரான்ஸ்பரன்சி குளோபல்’ நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத் தன்மைக்காக, பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
2019, 2020 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக LMD சஞ்சிகையால் வாடிக்கையாளர் அனுபவத்தில் இலங்கையில் மிகவும் பிரபலமான வங்கி சேவை வழங்குநராக செலான் வங்கி பட்டியலிப்பட்டது. இந்தச் சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மைக்கும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025