S.Sekar / 2021 மே 20 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசியாவில் வளர்ந்துவரும் 100 தலைவர்கள் தமது தலைமைத்துவத் திறன் மற்றும் ஆற்றலை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் சுயமாக இயக்கக்கூடிய ஐந்து வார நிகழ்நிலை பாடநெறியை பிரிட்டிஷ் கவுன்ஸில் ஐக்கிய இராச்சியத்தின் Clore Social Leadership கூட்டாண்மையுடன் வழங்கியது. பிரிட்டிஷ் கவுன்ஸிலால் முன்னோடித் திட்டமாக ஆபிரிக்காவில் இது நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 2020ஆம் ஆண்டு தெற்காசியாவில் முதல் கட்டமாக 100 பேர் கொண்ட குழுவுக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை பிரிட்டிஷ் கவுன்ஸில் ஊடாக 25-45 வயதெல்லையைச் சேர்ந்த 25 உள்நாட்டு பங்குபற்றுனர்கள், பரந்துபட்ட சமூக மற்றும் பாலின செயற்பாட்டுக் குழுக்களை உள்ளடக்கிய, தெற்காசிய குழுவில் பகுதியாகவிருந்த ஆர்வமுள்ள தலைவர்கள் பங்கேற்றனர். பெண்களின் உரிமைகளில் பணியாற்றுவது மற்றும் அவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கான உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்க எடுத்த முயற்சிகளின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
'இந்தப் பாடநெறி எமது கண்களைத் திறந்திருப்பதுடன், பாலினம் மற்றும் தலைமைத்துவத்தில் எனது அறிவையும் புரிதலையும் மேம்படுத்த இதன் உள்ளடக்கம் மிகவும் உதவியாக இருந்தது. செயற்பாடுகள் மற்றும் உள்ளடக்கங்கள் தன்னைப்பற்றியதாக இருந்தமையால் இது சுய பிரதிபலிப்புக்கான பயணமாக இருந்தது. சில உதாரணங்களை நான் வழங்குவதாயின், SWOT மதிப்பீடு, ஏன் என்ற காரணி' மற்றும் காணாமல் போன நபர்களின் செயற்பாடுகள் என்பன எனக்கு தாக்கம் செலுத்துவதாக அமைந்தன' என்று பெண்கள் மற்றும் இளைஞர் திட்டங்களுக்கான தன்னார்வலர், CREATE முயற்சியின் குழுத் தலைவர் பிரியதர்ஷினி விஜயரட்னம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் போது பங்குபற்றியோர் நேரடியான கலந்துரையாடல்கள், நிர்வகிக்கப்பட்ட கற்றல் வளங்கள், பிரதிபலிப்பான எழுத்துமுறை, நடைமுறை இலக்குகள் என்பவற்றின் மூலம் நன்மையடைந்ததுடன், தனிப்பட்ட சவால்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது சக பங்கேற்பாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கப்பட்டனர்.
'மாற்றுத்திறன் மற்றும் உள்ளடக்குதலுக்கான தலைமைத்துவம்', 'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான நிகழ்நிலை பாதுகாப்பு', 'டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பெண்களின் அணுகலை வலுப்படுத்துவதற்கான உத்திகள், மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கான டிஜிட்டல் வாய்ப்புகள்' போன்ற தலைப்புக்களில் நிகழ்நிலையிலும், களநிலையிலும் உள்ளூர் விழிப்புணர்வு கட்டமைப்பு ஆகிய முயற்சிகளை இந்த தலைமைத்துவத்தின் உச்சக்கட்டம் உள்ளடக்கியிருந்தது.
27 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
27 Jan 2026