2026 ஜனவரி 28, புதன்கிழமை

போதியளவு நிதி இல்லை

S.Sekar   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் இதுவரை எதிர்கொண்டிராத மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அரச ஊழியர்களின் சம்பளங்களை செலுத்திய பின்னர், அரசாங்கத்திடம் மிகவும் சொற்ப அளவு வரிப் பணம் மாத்திரமே எஞ்சியிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1,373 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த அதில் 794 பில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டது. ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு 258 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கு 1,052 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ. 1,373 பில்லியனாகும். இந்த வரிப்பணத்திலிருந்தே அரச ஊழியர்களின் சம்பளம் செலுத்தப்படுகின்றது. கடன்கள் மீதான வட்டியை செலுத்துவதற்கு 980 பில்லியன் ரூபாய்களும், மானியங்கள் மற்றும் மாற்றங்களுக்கான 717 பில்லியன் ரூபாய்களும் செலவிடப்படுகின்றன என அவர் மேலும் கூறினார்.

திரட்டப்படும் 1,373 பில்லியன் ரூபாயிலிருந்து 1,052 பில்லியன் ரூபாய் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர், 321 பில்லியன் ரூபாய் மாத்திரமே எஞ்சியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் கடந்த 74 வருடங்களில் எதிர்கொண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X