2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

மரக்கறி விலை உயர்வால் நுகர்வோர் வருவதில்லை

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய நாள்களாக மரக்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகின்றமையால், நுகர்வோர் பொருள்களைக் கொள்வனவு செய்ய வருகைத் தருவதில் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக, கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 

மழையுடனான பருவ நிலை, உற்பத்திச் செலவு உயர்வு, இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால், மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளதாகவும், சராசரியாக ஒரு மாத காலப்பகுதியினுள் மரக்கறிகளின் விலை சுமார் இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

மேலும், இந்த அரசாங்கத்தால் நமக்கு அவசியமானதை, நாமே பயிரிட்டு உண்போம் எனும் தொனிப்பொருளில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பெருமளவானோர் தமக்குத் தேவையான மரக்கறிகளை, தமது வீட்டுக் காணிகளில் உற்பத்தி செய்து கொள்வதாகவும் இதன் காரணமாக, மரக்கறி கொள்வனவு செய்வதற்காக கொழும்புக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையில், தொடர்ந்து வீழ்ச்சியை அவதானிக்க முடிந்ததாகவும், அந்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 

கடந்த சனிக்கிழமையன்று கொழும்பு மெனிங் சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 90 ரூபாய், போஞ்சி ஒரு கிலோகிராம் 360 ரூபாய், கரட் ஒரு கிலோகிராம் 270 ரூபாய், புடலங்காய் ஒரு கிலோகிராம் 200 ரூபாய், மரவள்ளிக்கிழங்கு ஒரு கிலோகிராம் 120 ரூபாய், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 150 ரூபாய்க்கு விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X