Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) முன்னெடுத்திருந்த மரதன DAG 'Supiri Chance 2' ஊக்குவிப்புத்திட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசுகள் வழங்கும் வைபவம் பேருவளை ஈடன் ரிசோர்ட் அன்ட் ஸ்பா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு AMW நிறுவனத்தின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் சமன்த ராஜபக்ஷ தலைமை வகித்திருந்தார்.
AMW வின் DAG பிரிவின் மூலமாக மரதன் DAG 'Supiri Chance 2' ஊக்குவிப்புத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. டயர் விற்பனையாளர்களுக்கு பரிசுகளை வெல்வதற்கு அதிகளவு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த போட்டியில் வழங்கப்பட்ட பரிசுகளுக்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை AMW செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசான பியாஜியோ டீசல் முச்சக்கர வண்டி ஒன்றை நிட்டம்புவ பாலித டயர் ஹவுஸ் உரிமையாளர் பாலித எதிரிசிங்க வெற்றியீட்டியிருந்தார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளான Yamaha FZ மோட்டார் சைக்கிள் மற்றும் Yamaha YBR மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வெல்லம்பிட்டிய பிரியந்த டயர் ஹவுஸ் உரிமையாளர் பிரியந்த குணசேகர மற்றும் யொகியான தனன்சூரிய டயர் சென்ரர் உரிமையாளர் மதுசங்க தனன்சூரியவும் வெற்றியீட்டியிருந்தனர். நான்காம் பரிசான Yamaha RAY கூட்டரை திருகோணமலை லயனல் டயர் ஹவுஸ் உரிமையாளர் எச்.டி.லயனல் வெற்றியீட்டியிருந்தார்.
2014 நவம்பர் 1ஆம் திகதி முதல் 2015 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் மரதன் DAG 'Supiri Chance 2’ ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. AMW வின் DAG டயர் விநியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவைகளை கௌரவிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்திருந்தது.
நான்கு பிரதான பரிசுகளுக்கு மேலதிகமாக, மலேசியாவுக்கு சென்று வருவதற்கான விமான பயணச் சீட்டுகள், தங்க நாணயங்கள், Sony LED TVகள் மற்றும் இதர ஆறுதல் பரிசுகள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன. இந்த போட்டியின் போது AMW மரதன் DAG டயர் வர்த்தக நாமம் மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
AMW இன் புதிய DAG டயர் வர்த்தக நாமமான மரதன் னுயுபு விற்பனை அறிமுகம் முதல் அமோகமாக இடம்பெற்றிருந்தது. 2013 இல் AMW இன் DAG டயர் பிரிவு அதிகளவு விற்பனை வளர்ச்சியாக 30 சதவீத உயர்வை பதிவு செய்திருந்தது. சந்தையில் மிகவும் வெற்றிகரமான வர்த்தக நாமமாக திகழ்வதற்கு உதவியாக அமைந்திருந்தது.
AMW இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிமல் எஸ். ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 'குறுகிய காலப்பகுதியில் சந்தையில் மரதன் DAG டயர் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதை தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் நாம் இதை முன்னெடுத்திருந்தோம். எமது விற்பனை முகவர்களை கௌரவிப்பதற்கு எமக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்கியிருந்தது. கம்பனி மற்றும் விற்பனை முகவர்கள் இடையிலான உறவு நிலைத்திருப்பதன் காரணமாக சந்தையில் இந்த தயாரிப்பு வெற்றிகரமான திகழ ஏதுவாக அமைந்துள்ளது' என்றார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'ஆண்டு முழுவதும் நாம் வௌ;வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். இதன் மூலமாக எமது விநியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் கௌரவிக்கப்பட்டிருந்தனர். மரதன் DAG 'Supiri Chance 2’ ஊக்குவிப்புத் திட்டம் இந்த திட்டங்களில் ஒன்றாகும். எதிர்வரும் மாதங்களில் நாம் இதுபோன்ற பல செயற்பாடுகளை எமது மரதன் DAG விநியோகத்தர்களின் நலன் கருதி முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
மரதன் DAG என்பது ட்ரக் மற்றும் சிறிய ரக ட்ரக் வகைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும். சகாயமான விலையில் அதிகளவு தவாளிப்புகளுடன் பெற்றுக் கொள்ளக்கூடிய டயர் வகையாக இது அமைந்துள்ளது. மேலும், மரதன் DAG மூலமாக மேலதிக ஆயுள் காலம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது.
AMW இனால் DAG டயர் வர்த்தக நாமங்களான மரதன் DAG, மரதன் ரேடியல், மரதன் Hi-Miler, OTR மற்றும் aDAG போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், கம்பனி எந்தவொரு ரிம் அளவுகளுக்கும் பொருந்தும் வகையில் டயர் மீள் நிரப்பல் தொடர்பான பரிபூரண ஆளுமையையும் கொண்டுள்ளது. இலங்கையில் Vacu-leg மற்றும் Die-Hard முறைப்படி டயர்களை மீள் நிரப்பும் ஆற்றல் கொண்ட ஒரே நிறுவனமாக AMW திகழ்கிறது.
களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் மீள் நிரப்பிய டயர்களை நிறுவுவதற்கான இரு தொழிற்சாலைகளை AMW கொண்டுள்ளது. AMW இன் உற்பத்தி செயற்பாடுகள் அனைத்தும் ISO தரப்படுத்தல்களை கொண்டுள்ளன. ISO 9001-2008இல் நிர்ணயிக்கப்பட்ட நியமங்களுக்கமைய அமைந்துள்ளன. சூழல் பாதுகாப்பு தொடர்பான ISO 14001-2004 என்பதற்கமையவும் காணப்படுகிறது.
சேர் சிரில் டி சொய்சா என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட AMW நிறுவனம் 70 ஆண்டுகளாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. டயர்கள் மீள்நிரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள முதலாவது வியாபாரங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைச் சேர்ந்த பல் தேசிய நிறுவனமான Al Futtaim எனும் நிறுவனத்தின் முழு அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாகும். வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள், காப்புறுதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற வியாபாரங்களை Al Futtaim முன்னெடுத்து வருகிறது.
43 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
5 hours ago