Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 16 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
துபாய் நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரான்ட்ஸ் ஒஃவ் ஏசியா 2018 - 19’ விருதுகள் வழங்கும் நிகழ்வில், மலிபன் பிஸ்கட்ஸ் நிறுவனத்துக்குச் சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
பிரான்ட்ஸ் ஒஃவ் ஏசியா விருதுகளினூடாக, எதிர்காலத்தை உருவாக்கும் வகையில்த் தமது தயாரிப்புகள், சேவைகளைப் பயன்படுத்தி, பொருளாதார மேம்பாட்டுக்குப் பங்களிப்பு வழங்கும் வர்த்தக நாமங்கள் கௌரவிக்கப்படுகின்றன. மேலும், இந்த வர்த்தக நாமங்கள் சுயமாகவே, தமது பிரத்தியேகமான பெறுமதிகள், உள்ளம்சங்களினூடாக, ஒப்பற்ற சந்தைப்படுத்தல் பிணைப்பைத் தமது வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்தியிருக்கும்.
தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக, பெருமைக்குரிய பிரான்ட் ஒஃவ் ஏசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில், குறித்த கௌரவத்தைப் பெற்றுள்ள மலிபன், மேம்படுத்தல், நம்பிக்கை, வர்த்தக நாமம் கட்டியெழுப்பல், நிலைபேறாண்மை, நற்பெயர், வளர்ச்சி, தயாரிப்பு, புத்தாக்கம் போன்றவற்றைத் தொடர்ந்து பேணி வரும் அர்ப்பணிப்புக்காக, இந்த விருதைப் பெற்றுக்கொண்டுள்ளது.
500 க்கும் அதிகமான முன்னணி வர்த்தக நாமங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பங்கேற்றிருந்தன. தாய்லாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த நாமங்கள் இந்த ஆண்டின் விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன.
பிரேரிக்கப்பட்ட வர்த்தக நாமங்கள் கடுமையான, மூன்று நிலை மதிப்பீட்டுச் செயன்முறைகளைப் பின்பற்றியிருந்தன.
முதல் கட்ட ஆய்வின் போது துறைசார்ந்த அறிக்கைகள், சந்தை ஆய்வுகள், வர்த்தக நாம அறிக்கைகள் போன்றவற்றின் மதிப்பீடுகள் உள்ளடங்கியிருந்ததுடன், இரண்டாம் கட்டத்தின் போது, இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் வர்த்தக நாமத்தின் நிலையை இனங்காண்பது அமைந்திருந்தது.
இறுதிக் கட்டத்தின் போது, பிரேரிக்கப்பட்ட வர்த்தக நாமங்கள் 1 முதல் 10 வரை (ஆகக்குறைந்தது 01, ஆகக்கூடியது 10) தரப்படுத்தப்பட்டன. போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மலிபனுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்கிய அம்சத்தில், நிறுவனத்தின் தொடர்ச்சியான புத்தாக்கமான அபிவிருத்திச் செயற்பாடுகளினூடாக, பொருளாதாரத்துக்கான பங்களிப்பு அதிகரித்திருந்தமை அடங்கியிருந்தது.
தொடர்ச்சியாக, இரண்டு வருடங்கள் பெருமைக்குரிய ஆசியாவின் சிறந்த வர்த்தக நாம விருதை வென்ற ஒரே உள்நாட்டு, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் நாமமாக ‘மலிபன்’ திகழ்கிறது.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025