Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kamal / 2018 ஜூன் 19 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. கமல்
‘கிரிஸ்ப்ரோ’ வியாபாரமானது, 46 வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி வர்த்தகரின் திட்டத்தின்படி ஆரம்பிக்கப்பட்டதாகும். தாய் பண்ணை, வளர்ப்பு பண்ணை, ப்ரொய்லர் பண்ணை மற்றும் கோழிகளுக்கான உணவு உற்பத்தி செயன்முறைகள் உட்பட விரிவான சூழலமைப்பில் இந்த ‘கிரிஸ்ப்ரோ’ நிறுவனம் அமைந்துள்ளது. ‘பண்ணை தொடக்கம் உணவு மேசை வரை’ என்ற தொனிபொருளை, தமது தொலைநோக்காக கொண்டு இந்நிறுவனம் செயற்படுகின்றது.
மேலும், ‘கிரிஸ்ப்ரோ’ குழுவினரின் பரந்தளவிலான வெற்றிக்கு காரணம், இந்நிறுவனம் தவிர்ந்த, வெளியிட கோழிகள் உற்பத்தியாளர்களதும் சோளப் பயிர்ச்செய்கையாளர்களதும் அகில இலங்கை ரீதியாகப் பாரியளவில் கிடைக்கப்பெற்ற பங்களிப்புகள் மற்றும் ஆதரவாகும் என நிர்வாகக் குழு தெரிவிக்கின்றது.
பெரும் எதிர்பார்ப்புடனான சிறிய ஆரம்பம்
‘கிரிஸ்ப்ரோ’ நிறுவனமானது 1972இல் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்நிறுவனம் இலங்கையின் முதற்தர கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமாகப் பரிணாமம் பெற்றுள்ளது. ‘கிரிஸ்ப்ரோ’ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தூய்மைக்கு முதலிடம் கொடுத்து, உற்பத்திகளை மேற்கொள்கின்றமையே இந்த இலக்கை எட்டக் காரணமாக அமைந்ததாக அதன் நிர்வாகக் குழு தெரிவிக்கின்றது.
தற்போது ‘கிரிஸ்ப்ரோ’ கூட்டு நிறுவனத்தின் கீழ், ஆறு நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 17 கிளை நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 1,100 மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
தரமான விநியோக முறைமை
‘கிரிஸ்ப்ரோ’ கூட்டு நிறுவனத்தால், கோழிக்கான உணவு உற்பத்தி, கோழி இறைச்சி உற்பத்தி, செயற்கை முறையிலான கோழிக்குஞ்சு உற்பத்தி என்பன இடம்பெறுகின்றன. இதனுடன் ப்ரொய்லர் கோழி இறைச்சி உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகின்றது. இவை முறையான குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட லொரிகள் மூலம் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுகின்றன.
கிராமிய உற்பத்தியாளர்களை மேம்படுத்தல் ‘கிரிஸ்ப்ரோ’ நிறுவனத்தின் உற்பத்திகளுக்குத் தேவையான மூலதன பொருட்கள் தெஹியத்த கண்டி, கிரிந்துறுகோட்டே, கந்தளாய் உள்ளிட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
கோழி உணவுகளுக்காக சோளம், நெல் உள்ளிட்டவைகளை, இலங்கை விவசாயிகளிடமிருந்து ‘கிரிஸ்ப்ரோ’ கொள்வனவு செய்கின்றது.
உயர்தர உற்பத்திக்கான அங்கிகாரம்
குருணாகல், வீரம்பகெதர பகுதியில் அமைந்துள்ள ‘எக்ரோ’ நிறுவனத்தில், ‘கிரிஸ்ப்ரோ’ நிறுவனத்தின் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கான உணவு தயாரிக்கப்படுகின்றது. 11 மாடிகளை கொண்ட இந்நிறுவனம் முழுமையாகவே இயந்திர செயற்பாடுகளைக் கொண்டது. இந்நிறுவனத்தில் வருடத்துக்கு 120,000 தொன் கோழிகளுக்கான உணவு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காகச் சுமார் 60,00 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
சூழல் பாதிப்பற்ற உற்பத்தி முறைமை
ஐ.எஸ்.ஓ 14001 தரச்சான்றிதழ் பெற்ற இந்நிறுவனமானது, தனது அனைத்து உற்பத்திகளின் போது, சூழல் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்குகின்றது. குறிப்பாக, கோழி இறைச்சி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர், மீள் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் ஆய்வின் பின்னர் மகாவலி ஆற்றில் திறந்துவிடப்படுகின்றது.
மத்திய மலைநாட்டை மையப்படுத்தியதாக இயங்கும் ‘கிரிஸ்ப்ரோ’ கோழி இறைச்சி உற்பத்தி நிலையங்கள், செயற்கை முறையில் உருவாக்கப்படும் கோழிக்குஞ்சுகளைப் பாராமரித்து, வளர்த்து, அவற்றிலிருந்து கோழி இறைச்சி உற்பத்தியை மேற்கொள்கின்றது.
முதலில் கோழிகளின் தரத்தை உறுதிப்படுத்தல், அவற்றின் நிறைக்கு அமைவாக வேறுபடுத்தல், தெரிவு செய்யப்பட்ட கோழிகளை மயக்கமடையச் செய்தல், பின்னர், தோல் நீக்கி, சுத்தம் செய்யப்பட்டு, பொதியிடல் என்ற அனைத்து செயற்பாடுகளும் நவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றமை இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago