Freelancer / 2024 மே 20 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD ஆல் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும் விரும்பப்படும் வங்கி' வர்த்தக நாமமாகவும், ஒட்டுமொத்தமாக நாட்டில் சேவைத்துறையில் இரண்டாவதாக 'அதிகம் விரும்பப்படும்' வர்த்தக நாமமாகவும் கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருதுகள் LMD இன் ஆய்வு பங்காளரான PepperCube ஆலோசகர்களின் இணையத்தள மதிப்பாய்வின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
மேல், தென், மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களைச் சேர்ந்த LMD யின் வாசகர்கள் இந்த மதிப்பாய்வு கணக்கெடுப்பில் பங்கேற்றதுடன் மற்றும் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் 34 பிரிவுகளின் கீழ் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த பெறுமதிமிக்க பொதுமக்களின் அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் சில்லறை வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க, 'மக்களின் உணர்வை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய விருதுகளை பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் உள்ளதுடன் அனைத்து பங்குதாரர் குழுக்களுக்கும் எங்கள் கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் அமைந்துள்ளன. இந்த தரவரிசையானது, ஒவ்வொரு கொமர்ஷல் வங்கி ஊழியருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த ஆதாரமாகவும், நாங்கள் சரியாக செயற்பாடுகளை மேற்கொள்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது˜ எனக் கூறினார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில், கொமர்ஷல் வங்கியானது, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) - Kantar Peoples விருதுகளில், 'ஆண்டின் சிறந்த மக்கள் தனியார் வங்கியாக’ தெரிவு செய்யப்பட்டதுடன், UK இன் குளோபல் ஃபினான்ஸினால் இலங்கையின் சிறந்த வங்கி மற்றும் இலங்கையின் சிறந்த SME வங்கி உட்பட பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago