Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல் வாடிக்கை யாளர்களுக்கு BookMyShow வில் டிக்கட்களை கொள்வனவு செய்யலாம்
மொபிடெல், BookMyShow உடன் கூட்டிணைந்து தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு புத்தம்புதிய சினிமா படங்கள், கிரிக்கட் போட்டிகள் மற்றும் ஏனைய பிரபலமான கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கான டிக்கட்டுக்களை கொள்வனவு செய்துகொள்ள வழிவகுத்துள்ளது.
மொபிடெலின் பிற்கொடுப்பனவு இணைப்புக்களுக்கு BookMyShowஇன் மூலம் இவ்வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தனித்துவமான சேவையானது மொபிடெலினால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான டிக்கட்களை கொள்வனவு செய்து கொண்டு அதற்கான கொடுப்பனவுகளை மொபைல் இணைப்பின் மூலம் செலுத்திடக்கூடிய மிகச்சிறந்த வசதியை மொபிடெல் வழங்குகிறது.
இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் மொபிடெல் ஆனது புத்தாக்கத்துக்கும் இலங்கையின் ICT உருமாற்றத்திற்கான உந்துதலுக்கும் முக்கிய காரணியாக தமது நிலையை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
இதுவே Internet of Things (IoT) கருதுகோளைக் கொண்ட X Station இனை அறிமுகப்படுத்திய முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனமும் ஆகும். இந்த நிபுணத்துவம் பெற்ற மையமானது மக்களுக்கு தொழில்நுட்ப புரட்சியை அனுபவித்திட எதிர்கால தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை தம்மகத்தே கொண்டுள்ளது.
மொபிடெல் ஆனது உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அவற்றை உள்வாங்கிக் கொள்ள தயார்நிலையில் இருப்பதை மீண்டும் வெளிக்காட்டுவதாக இக்கூட்டிணைவு அமைவதுடன் உலகில் மிகவேகமாக மாறுபடும் தொழில்நுட்ப வளைவுகளுக்கு தலைமை வகிப்பதில் முன்னாள் இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
35 minute ago
2 hours ago