Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘மொபிடெல் காஷ் பொனான்ஸா களியாட்ட நிகழ்வு’ கந்தளாய், அக்ரபோதி வித்தியாலய மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இக்களியாட்ட நிகழ்வில் முழு நாளும் முழுக்குடும்பத்துக்குமான குதூகலமளிக்கும் பொழுது போக்கு விளையாட்டுகள் உட்பட பல செயற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. பன்ஜி ஜம்பிங், வரைதல் போட்டிகள், மொபிடெல் அதிவேக 4G இணைய இணைப்புகள் மூலம் இயங்கும் விளையாட்டு மண்டலம் (Gaming Zone), IoT (Internet of Things) பயிற்சி அமர்வுகள், சிறுவர்களுக்கான விளையாட்டு தளம், மொபிடெல் சேவைகள், தயாரிப்புகள் வழங்கிடும் கூடங்கள், அழகு நிலைய கூடங்கள் அத்துடன் இலவச மருத்துவ ஆலோசணை கிளினிக்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
மொபிடெலின் சமூக பொறுப்புணர்வு சார் முன்னெடுப்பாக சிறப்பு கண் மருத்துவ சிகிச்சைக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் அனுபவம் மிக்க கண் மருத்துவர்களால் கண் பரிசோதனை செய்யப்பட்டு 1,000 மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மாலை நேரத்தில் மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியுடன் இக்களியாட்ட நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
பத்தரமுல்லையைச் சேர்ந்த எம்.மலிந்த சஞ்ஜீவ மல்பொரு, காரினை எடுத்துச் சென்றார். அத்துடன் உடவளவையைச் சேர்ந்த ஏ.ஜி.ஜே. புஷ்பகுமார 2வது வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டதுடன் ரூ.1,000,000 பணப்பரிசையும் பெற்றுக் கொண்டார். 3ஆவது வெற்றியாளரான இரத்கமையைச் சேர்ந்த டீ. நந்தாவதி ரூ. 500,000 பெறுமதியான பணப்பரிசையும் பெற்றுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago