Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடெல் மொறட்டுவை கிளை, K-Zone க்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்குள்ள சகோதர நிறுவனங்களான சொப்ட்லொஜிக் மெக்ஸ், பேர்கர் கிங் மற்றும் பாஸ்கின் ரொபின் என்பனவற்றோடு தற்போது இணைந்துள்ளது. சொப்ட்லொஜிக் குழுமத்தால் மட்டுமே வழங்கக் கூடிய பல்பரிமாண தொகுதிக் கடை கொள்வனவு அனுபவத்தை இங்கு வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
புதிய இடம் 6935 சதுர அடிகளைக் கொண்டது. ஒடெல் மொறட்டுவை வடிக்கையாளர்களை கணிசமாகக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டது. இங்குள்ள சர்வதேச கீர்த்திமிக்க வர்த்தகச் சின்னங்கள் மற்றும் அவற்றின் சில்லறை விநியோகம் என்பன வாடிக்கையாளர்களைக் கவரும் முக்கிய விடயங்களாகும்.
பொருள் கொள்வனவுக்கான இந்தப் பண்டிகைக் காலம் இந்த இடமாற்றத்துக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அண்மையில் இது சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. சொப்ட்லொஜிக் ஹோல்டிங் குழுமத்தின் தலைவர் அஷோக் பதிரகே இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பெருந்திரளான கொள்வனவாளர்களும் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்த இடமாற்றம் பற்றி குறிப்பிட்ட சொப்ட்லொஜிக் குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் தெஸிரி கருணாரத்ன “பொருள் கொள்வனவு என்பது ஒரு அனுபவம் என நாம் நம்புகின்றோம். அது இடத்தோடு இணைய வேண்டும். விரிவான பொருள் தெரிவுகள் இருக்க வேண்டும். சிறந்த வர்த்தக முத்திரைகளும் அமைய வேண்டும். பிரத்தியேகமான சேவைகள் இருக்க வேண்டும். கொடுக்கின்ற பணத்துக்கு பெறுமதியும் வசதியும் இருக்க வேண்டும். K-zone க்கு இடம்மாறியதன் மூலம் ஒடெல் மொறட்டுவ இந்த எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி உள்ளது. ஒடெல் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள அன்பை மேலும் நிலைநிறுத்தும் வகையில் மகிழ்ச்சிகரமான பொருள் கொள்வனவு அனுபவத்தை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறினார்.
52 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago