2024 மே 20, திங்கட்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் 2023 முதல் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு

Freelancer   / 2023 ஜூன் 16 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், 2023 முதல் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சவால்கள் நிறைந்த தொழிற்படு சூழலிலும், சகல பிரதான வினைத்திறன் அளவுகோல்களிலும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்ததனூடாக, தனது பங்காளர்களுக்கு ஒப்பற்ற பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நிறுவனம் கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வரிக்கு முந்திய இலாபத்தில் 117% அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 2022 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 279 மில்லியனிலிருந்து 2023 முதல் காலாண்டில் ரூ. 605 மில்லியனாக உயர்ந்திருந்தது. இந்த உயர் வளர்ச்சியினூடாக நிறுவனத்தின் தந்திரோபாயத் திட்டங்கள் மற்றும் சந்தையில் காணப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளல்கள் ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. நிறுவனத்தின் மொத்த தேறிய வருமானம் முன்னைய நிதியாண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 4.7 பில்லியனிலிருந்து 2023 முதல் காலாண்டில் ரூ. 6.5 பில்லியனாக 37% உயர்ந்திருந்தது. அதனூடாக நிலைபேறான வளர்ச்சி தொடர்பில் நிறுவனத்தின் நோக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸின் தேறிய முதலீட்டு வருமானமும் துரித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. 2022 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1.4 பில்லியனிலிருந்து ரூ. 2.4 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதனூடாக, முதலீடுகளை நிர்வகிப்பதில் நிறுவனம் கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் காப்புறுதிதாரர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு உயர் வருமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் ஆற்றல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன. மேலும், 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நிகர வழங்கிய தவணைக்கட்டணம் மற்றும் தேறிய வழங்கிய தவணைக்கட்டணம் ஆகியனவும் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. இதில் நிகர வழங்கிய தவணைக்கட்டணம் ரூ. 3.9 பில்லியனிலிருந்து ரூ. 4.2 பில்லியனாகவும், தேறிய வழங்கிய தவணைக்கட்டணம் ரூ. 3.8 பில்லியனிலிருந்து ரூ. 3.9 பில்லியனாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. மேலும், நிறுவனத்தின் உறுதியான நிதிப் பெறுபேறுகளை உறுதி செய்யும் வகையில், நிகர வழங்கி தவணைக் கட்டணம் 4.8% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் துறைசார் சராசரி பெறுமதியை விட விஞ்சும் வகையில் அமைந்திருந்தது. சந்தை மூலதனவாக்கப் பெறுமதி என்பதும் 2022 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் ரூ. 16.4 பில்லியனிலிருந்து ரூ. 19.4 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது 18% வளர்ச்சியாகும். உரிமைகோரல்களை நிறைவேற்றும் கடப்பாட்டை உறுதி செய்யும் வகையில், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 1.6 பில்லியன் பெறுமதியான உரிமைகோரல்கள் செலுத்தப்பட்டிருந்தன.

நிறுவனத்தின் சிறந்த தொழிற்பாட்டு வினைத்திறன் பெறுபேறுகளினூடாக அதன் வெற்றிகரமான செயற்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. செயற்பாடுகளினூடாக இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 122% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததுடன், ரூ. 240 மில்லியனிலிருந்து ரூ. 534 மில்லியனாக உயர்ந்திருந்தது. பங்கொன்றின் மீதான வருமதி ரூ. 0.37 முதல் ரூ. 0.75 ஆக உயர்ந்திருந்தது. இது 105% அதிகரிப்பு என்பதுடன், பங்காளர் பெறுமதியை மேலும் உயர்வடையச் செய்திருந்தது.  நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2023 மார்ச் மாத இறுதியில் ரூ. 79 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த பெறுமதி ரூ. 76 பில்லியனாக காணப்பட்டது. மார்ச் மாத இறுதியில் மூலதன போதுமை விகிதம் 245% ஆக காணப்பட்டதுடன், ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்வாக காணப்பட்டது. மேலும், ஆயுள் காப்புறுதி நிதியம் ரூ. 57.3 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், உறுதியான நிதிசார் அடித்தளத்தையும் பிரதிபலித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X